Untitled Document
Home| Trust Services | சித்தர் சிவந்திலிங்கசுவாமிகள் செய்த அற்புதங்கள் | உயிரோசை இதழில் | Video | Enquiry | Photos | Contact Us

அகஸ்தியர் அருள்வாக்கு

சத்தியே பராபரமே ஒன்றே தெய்வம் சகலவுயிர் சீவனுக்குமதுதானாச்சு
புத்தியினாலறிந்தவர்கள் புண்ணியோர்கள் பூதலத்தில் கோடியிலே யொருவருண்டு
பத்தியினால் மனமடங்கி நிலையில்நிற்பார் பாழிலே மனத்தி விடார் பரமஞானி
சுத்தியே யலைவதில்லை சூட்சஞ்சூட்சம் சுழியிலே நிலை யறிந்தால் மோட்சந்தானே
மோட்சமது பெறுவதற்குசூட்சஞ் சொன்னேன் மோகமுடன் பொய் களவு கொலைசெய்யாதே
காய்ச்சலுடன் கோபத்தை தள்ளிப்போடு புண்ணியத்தைக் கருதிக்கொள்ளு.

தேரப்பா தெருத்தெருவே புலம்புவார்கள் தெய்வநிலை ஒருவருமே காணார்காணார்
ஆரப்பா நிலை நிற்கப் போராரையா ஆச்சரியம் கோடியிலே ஒருவன் தானே
பருவமதிற் சேறுபயிர் செய்யவேண்டும் பாழிலே மனத்தை விடான் பரமஞானி
திரிவார்கள் திருடரப்பா கோடாகோடி தேசத்தில் கள்ளரப்பா
கோடாகோடி வார்த்தையினால் பசப்புவார்கள் திருடர்தானே
தானென்ற தான் தானொன்றே தெய்வம் தகப்பனும்
தாயும் அங்கே புணரும்போது நானென்று கருப்பிடித்து
வந்த நாதனை என்னாலும் வணங்கி நில்லு.
மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டா
மனமது செம்மையானால் வாயுவை உயர்த்த வேண்டா
மனமது செம்மையானால் வாசியை நிறுத்த வேண்டா
மனமது செம்மையானால் மந்திரம் செம்மையாமே.

பாரப்பா சீவன்விட்டுப் போகும்போது பாழ்ந்த பிணம்
கிடக்குதென்பார், உயிர்போச்சென்பார் ஆகாய சிவத்
துடனே சேருமென்பர் காரப்பா தீயுடன் தீச்சேரு
மென்பார் கருவறியா மானிடர்கள் கூட்டமப்பா
சீரப்பா காமிகள் தாமொன்றாய்ச் சேர்ந்து தீயவழி
தனைத் தேடிப் போவார் மாடே
மாடுதானாலும் ஒருபோக்குண்டு மனிதருக்கோ
அவ்வளவும் தெரியாதப்பா நாடுமெத்த நரகமென்பார்
சொர்க்க மென்பார் ஆர்தான் அறிந்ததப்பா நல்வ்வினையோ தீவினையோ
ஒண்ணமாட்டார்.

வீண்பேசாதே - பரப்பிலே
திரியாதே, மலையேறாதே, நகையாதே, சினங்காதெ
உறங்கிடாதே, நழுகாதே, சுழுமுனையிற் பின்வாங்காதே
செகமுழுதும் பரிபூரண மென்றறிந்து தெளிந்து
பின் உலகத்தோடொர்த்து வாழே.
வாழாமல் உலகம்விட்டு வேடம் பூண்டு வயிற்றுக்காய்
வாய் ஞானம் பேசிபேசி தாழ்வான குடிதோறும் இரப்பான்
மட்டை, தமையறியாச் சண்டாளர் முழுமாடப்பா
பாவிகள் சொல் கேட்டுப் பாழாகாதே
உடலும் உயிரும் பூரணமும் ஒன்றே
உடலுயிரும் பூரணமும் அயன் மாலீசன் உலகத்தோர் அறியாமல் மயங்கிபோனார்

கர்ப்பமென்று வெகுதூரம் போகவேண்டாம் கண்மலை
யில் குவடுகளில் அலையவேண்டா கர்ப்பமென்ன
நாகமதோர் தலையிற் நின்று சகாத கால்கண்டு
முனையிலேறி நிற்பமென்று மனமுறுத்து
மனத்தில் நின்று நிசமான கருநெல்லிச் சாற்றைக் காணு.
சொர்பமென்று விட்டுவிட்டால் அலைந்து போவாய்
துரியமென்ற பராபரத்திற் சென்றுகூடே
சித்தர்களின் அரிய தகவல்கள்
  பதினெண் சித்தர்கள் துதி
- - - - - - - - - - - - - - - - - -
  சித்தர்களின் குலதெய்வம்
(வாலை-வாராஹி)
- - - - - - - - - - - - - - - - - -
  அகஸ்தியர் அருள்வாக்கு
- - - - - - - - - - - - - - - - - -
  கோரக்கச் சித்தரின் "சந்திரரேகை"
உலக மாற்றம்
- - - - - - - - - - - - - - - - - -
  கலியுதிப்பில்
(ஆண்ட மன்னர்கள் - இனி ஆளப்போவது)
- - - - - - - - - - - - - - - - - -
  வீர பிரமேந்திர சுவாமிகளின்   
காலக்ஞானம (கலிநடப்பு, முடிவு)
- - - - - - - - - - - - - - - - - -
  சித்தர்கள் வல்லபம்
- - - - - - - - - - - - - - - - - -
  சித்தர்கள் பரகாயப் பிரவேசம்
கூடுவிட்டுப் கூடுபாய்தல்
- - - - - - - - - - - - - - - - - -
  கோரக்கச்சித்தர், கருவூர்ச்சித்தர் கூறும்
இல்லறப் பெருமை

பிற தகவல்கள்
  சிவனிடம் கலி பெற்ற வரங்கள்
- - - - - - - - - - - - - - - - - -
  தர்ம சேனையின் கடமைகள்
- - - - - - - - - - - - - - - - - -
  வைகுண்டர் பிறக்க அடையாளம்
- - - - - - - - - - - - - - - - - -
  சன்மார்க்க பெரும்பதி வருகை
- - - - - - - - - - - - - - - - - -
  வகுப்புவாதத்தை வேரறுப்போம்
         Copyright @ 2010 Siddhar ulagam, Ponnamaravathi www.go4property.com