சித்தர் சிவந்திலிங்கசுவாமிகள் செய்த அற்புதங்கள்
- சித்தர் சிவந்திலங்க சுவாமிகள் திருவையாருக்கு சமீபத்தில் ஏசுராபுரத்தில் கன்னட சிவகோத்திர மரபில் அவதரித்தார்.
- இல்லறத்தில் இருந்தாலும் ஜீவன் முக்தி அடையலாம் என்ற உயரிய நிலையை வாழ்ந்து காட்டியவர் ஆவார். பழனியில் போகரிடமும், ஸ்ரீ முருகரிடமும், தென் பொதிகையில் அகத்திய முனிவரிடமும் தீட்சை பெற்றுள்ளார்.
- இராமநாதபுரம் சேது சமுத்திரத்தில் இரகுநாத சேதுபதி மன்னர் முன்னிலையில் தனது உருவத்தை இரண்டு பனைமர உயரம் வளரச் செய்து திரு நடனம் ஆடினார்.
- சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூரில் மக்கள் மழையில்லாது வருந்தி சித்தரிடம் முறையிட சித்தரவர்கள் வடுக பைரவரை அழைக்க அவர் தரிசனம் தர பைரவர் கையிலிருந்த சூலத்தை வாங்கி விண்ணில் எறிய கனமழை பெய்து மக்கள் மகிழ்ந்தனர்.
- இரகுநாத சேதுபதி மன்னரும் அம்மன்குறிச்சி பூச்சைய மன்னனும் தரிசனம் செய்வதற்காக மதுரை மீனாட்சி சொக்கநாதரின் திருக்காட்சியை தனது உள்ளங்கையில் காண்பித்தார். சித்தர் வேண்டுகோளின்படி மதுரையில் மீனாட்சி அம்பிகை காட்சி தந்து அம்மன் தலையசைத்து சம்மதம் தெரிவித்து அம்மன் குறிச்சியில் மீனாட்சி சொக்கநாதர் ஆலயம் அமைத்தார். (பொன்னமராவதியிலிருந்து திருச்சி சாலையில் உள்ளது)
- அதே ஊரில் இறந்த குழந்தையின் உடலை கிழித்து இரண்டு உடல்களாக செய்து உயிர் கொடுத்து மன்னர் மக்கள் முன்னிலையில் நடனமாட வைத்தார். மீண்டும் இரு உடலையும் ஒன்று சேர்த்து ஒரு குழந்தையாக்கி பூச்சைய மன்னனிடம் கொடுத்து வளர்த்துவர சொன்னார்.
- அறந்தாங்கியில் ஆணவம் பெற்ற மதபோதகரின் ஆணவத்தை அடக்க இறந்த பிரேதத்தை எழுந்து ஆடவைத்தார்.அதைப் பார்த்ததும் மதபோதகர் மறுநாளே அவ்வூரைவிட்டு சென்று விட்டார்.
- செம்பூதி சிவந்திலிங்கசித்தரை தரிசனம் செய்து பழனிக்கு காவடி எடுத்து சென்ற திருப்பெருந்துறை செல்லத்துரையிடம் பழனி முருகன் கருவறையில் இருந்து செம்பூதி சிவந்திலிங்க சித்த்ரை நலம் விசாரித்துள்ளார்.
- மயூரகிரி (தேனிமழையில்) கணவனும், மனைவியுமாக தவம் செய்த போது வடிவேல் முருகன் இவர்களுக்கு காட்சி தந்தருளினார்.
- திருப்பெருந்துறை கோயில் ஸ்தானிகர் குருலிங்கருக்கு இருந்த குஷ்ட வியாதியை நீக்கி தன் மகள் அறம்வளர்தாளை அவருக்கு மணமுடித்து கொடுத்தார்.
- அங்காள பரமேஸ்வரி அன்னை காட்சி தந்து சித்தரின் வேண்டுகோளுக்கிணங்க வீர இருளப்பரை இவருக்கு இட்ட பணி செய்ய அனுப்பி வைத்தார்.
- கணவனும் மனைவியும் ஜீவ சமாதிக்கு செல்லுமுன் இஷ்ட பரிவார தெய்வங்களான கணபதி, முருகன், சன்னாசி, இரண வீரபத்திரர், சத்துரு, சங்காரி, மீனாட்சி, பாதாளகாளி, ரக்காயி, பேச்சி, பகவதி, சௌந்தரி், குடச்சி, அனுமந்தன், சுபத்திரன், கருப்பர்் அனந்தச்சந்திரர், வீரதுந்துபி முதலிய தேவதைகளை அழைத்து அவர்களுக்குரிய பூஜை செய்து ஜீவசாமாதிக்கு பரிவாரங்களாக இருக்க வைத்தார். சித்தர்கள் இருவரும் ஜீவசமாதி ஆனபின் பீடத்தில் மன்னர் இரகுநாத சேதுபதி இருவருக்கும் லிங்க பிரதிஷ்டை செய்து நந்தி தேவரையும் பிரதிஷ்டை செய்தார்.
- ஜீவசமாதியான பின்பு புதுக்கோட்டை தொண்டைமான் சித்தர் பீடத்திற்கு வந்து தரிசனம் செய்ய சிவந்திலங்க சித்தர் மீண்டும் தரிசனம் தந்தார்.
- மேலும் விரிவான வரலாற்று நூல் விரைவில் வெளிவருகிறது.
|
|