கருவூரர், கோரக்கர் கூறும் - பொய் துறவு.
துறவு புக்கித் துரிதமுடன் தூதுவைத்துத்
தோகயரைப் புல்லுதற்காய்த் தூளிதங்கள்
பரப்பியந்திர மேலிட்டுத் தவசியைப்போல்
பாசாங்கு செய்து பக்கம் பார்த்து நின்று
புறங்காட்டிப் பூவையரைப் புல்வோர் பேயர்
பூரணத்தின் இயல்பென்ன வென்று கேட்டால்
மறம்பூண்டு வாயில்வந்த படியாய்ப் பேசி
மாந்தர்களை மயக்கிடுவர் முத்திகேகாரே
---இல்லறந்தான் இகபரத்தின் மோட்சவீடே,
சிவவாக்கியர்
யோகசாடை காட்டுவார் உயரவும் எழும்புவார்
வேகமாக அட்டசித்து வித்தைகற்று நெட்டுவார்
மோகம் கொண்டு மாதரிடம் சிக்கிப்பின்
பேயது பிடித்தவர்போல் பேருலகில் சாவரே.
காலகாயம் உண்பதாகக் கண்டவர் மதித்திட
மாயவித்தை செய்திங்கு மடிப்பு மோசம் செய்பவர்
நேயமாய்க் கஞ்சா அடித்து நேர் அபினைத் திண்பதால்
நாயதாக நக்கிமுக்கி நாட்டினில் அலைவரே.
காவியும் சடைமுடி கமண்டலங்கள் ஆசனம்
தாவுருத்திராட்சம் யோகத் தன்டு கொண்ட மாடுகள்
தேவியை அலையவிட்டுத் தேகம் எங்கும் சுற்றியே
பாவியென்ன வீடெலாம் பருக்கை கேட்டு அலைவரே |