சித்தர்ஸ்ரீ ஏகம்மையார் சமேத சித்தர்ஸ்ரீ சிவந்திலிங்க சுவாமிகளின் திவ்ய சரித்திரம் - நூல் வெளியீடு (அச்சில் உள்ளது), மற்றும் ஏனைய சித்தர்களின் நூல்கள் வெளியீடு.
சித்தர்கள் நெறிக் கலைகளான தியானம் - ப்ராணாயாமம் (வாசியோகம்), யோகாசனம், ஆன்மீக அறநெறிக்கல்விகளுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்துதல்.
சித்தர் பீடங்களில் முறையாக வழிபாடுகள் நடைபெற ஆவண செய்தல்.அன்னதானங்கள் மிகுந்து செய்தல்.
ஏழை,எளிய மக்களின் வாழ்க்கை நலன்பெறத் தகுந்த ஆலோசனைகளும், உதவிகளும் செய்தல்.
இலவச சித்த மருத்துவ முகாம்களும், அரிய மூலிகைக் காப்பகங்கள் மற்றும் ஆராய்ச்சி மையங்கள் அமைத்தல்.
நன்கு படிக்கும் ஏழை மாணவ, மாணவிகளுக்கு கல்விக்குறிய ஊக்கமும், பொருளாதார உதவிகளும் செய்தல்.
இருதய நோய்கள், நீரழிவு நோய்கள், பால்வினை நோய்கள் மற்றும் இதர நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் மனதளவிலும், உடலளிவிலும் குணமடைய ஆலோசனைகளும் தகுந்த மருத்துவ உதவிகளும் செய்தல்.
ஏழை எளிய திருமணமாகாத பெண்களுக்கு இலவச திருமணங்கள் செய்து வைத்தல்.
சித்தர்களும், ஞானியர்களும் உருவாக்கிய சாதி மத பேதமற்ற ஆன்மீக உணர்வை உருவாக்குதல் போன்ற இன்னும் பல அரிய தர்ம காரியங்கள்