Untitled Document
Home| Trust Services | சித்தர் சிவந்திலிங்கசுவாமிகள் செய்த அற்புதங்கள் | உயிரோசை இதழில் | Video | Enquiry | Photos | Contact Us

சித்தர்கள் வல்லபம்
பாம்பாட்டிச் சித்தரின் பாடல்கள்

எட்டுநாகம் தம்மைக் கையால் எடுத்தே ஆட்டுவோம்.
  இந்திரனார் உலகத்தை இங்கே கட்டுவோம்.
கட்டுக்கு அடங்காத பாம்பைக் கட்டி விடுவோம்.
  கடுவிஷத் தன்னைக் கக்கி ஆடுபாம்பே.

ஆதிசேசன் ஆயினும்மெம் மங்கையினாலே
  ஆட்டிவிடுவோம் எங்கள் ஆக்கினைக்குள்ளே.
நீதியோடு மடங்கியே நின்றிடச் செய்வோம்.
  நின்ற நிலை தவறாமல் ஆடுபாம்பே.

தூணைச் சிறுதுரும்பாகத் தோன்றிடச் செய்வோம்
  துரும்பைப் பெருந்தூணாகத் தோற்றச் செய்வோம்.
ஆணைப் பெண்ணு பெண்ணை ஆணும் ஆகச் செய்குவோம்.
  ஆரவாரித்து எதிராய் நின்று ஆடுபாம்பே.

எட்டு மலைகளைப் பந்தாய் எடுத்து எறிகுவோம்
  ஏழுகடலையும் குடித்து ஏப்பமிடுவோம்.
மட்டுப்படா மணலையும் மதித்து விடுவொம்.
  மகாராசன் முன்பு நீநின்று ஆடுபாம்பே.

மண்டலமுற்று மென்கையால் மறைத்து விடுவோம்.
  வானத்தையுமே வில்லாக வளைத்து விடுவோம்.
தொண்டருக்குச் சூனியம் சொல்லிக் காட்டுவோம்.
  தோன்றலுக்கு முன்பு நீ நின்று ஆடுபாம்பே.

முண்டெரியும் அக்கினிக்குள் மூழ்கி விடுவோம்.
  முந்நீருள் இருப்பினும் மூச்சடக்குவோம்.
தாண்டிவரும் வன்புலியைத் தாக்கி விடுவோம்.
  தார்வேந்தன் முன்பு நீ நின்று ஆடுபாம்பே.

செப்பரிய மூன்றுலகுஞ் செம்பொன் ஆக்குவோம்.
செங்கதிரைத் தன் கதிராய்த் தோன்றச் செய்குவோம்.
இப்பெரிய உலகத்தை இல்லாமல் செய்வோம்.
எங்கள் வல்லபங் கண்டு நீ ஆடுபாம்பே.

வேதன் செய்த சிருஷ்டிகள் போல் வேறு செய்குவோம்.
  வேதனையும் எங்கள் கீழே மேவச் செய்குவோம்.
நாதனுடன் நாங்களும் சமமாக வாழ்வோம்.
  நாங்கள் செய்கையாம் இதுவென்று ஆடுபாம்பே.

அறுபத்து நாலு கலையாவும் அறிந்தோம்.
  அதற்குமேல் ஒரு கலையானதறிந்தோம்.
மறுபற்றுச் சற்றுமில்லா மனமும் உடையோம்.
  மன்னனே ஆசான் என்று ஆடுபாம்பே.

சீறுபுலி யானை யாளி சிங்க முதலாய்ச்
  சிற்றடிக்குக் குற்றேவில் செய்யச் சொல்லுவோம்.
வீறுபெருங் கடவுளை எங்களுடனே
  விளையாடச் செய்கு வோமென்று ஆடுபாம்பே.

உரைநடை

சித்தர் என்பவர் யார்?

சிந்தை தெளிந்திருப்பவனார் அவனே சித்தன்
செகமெலாஞ் சிவமென்றே அறிந்தோன் சித்தன்.
-வால்மீகர் சூத்திர ஞானம்.

சாஸ்திரத்தைச் சுட்டெரிந்தால் அவனே சித்தன்.

2. சித்தர்கள் செய்யும் வல்லபம் பற்றி பாம்பாட்டிச் சித்தர் பாடல்கள்:

  1. கொடிய அஷ்ட நாகங்களையும் கையால் எடுத்தே ஆட்டுவோம். கட்டுக்கு அடங்காத பாம்மையும் கட்டி விடுவோம். இந்திரனின் உலகத்தைப் போல் சொர்க்க உலகத்தை இங்கு கட்டுவோம்.
  2. ஆதிசேஷன் தன்னையும் எங்கள் உள்ளங்கையால் ஆட்டிவிடுவோம். நீதியோடு எங்கள் கட்டுப்பாட்டிற்குள் நின்றிடச் செய்வோம்.
  3. தூணைச் சிறுதுரும்ப்பாகவும், துரும்பை பெருந்தூணாகவும் தோன்றிடச் செய்வோம். ஆணைப் பெண்ணுமாகவும் பெண்ணை ஆணுமாகவும் தோன்றிடச் செய்வோம்.
  4. எட்டு மலைகளைப் பந்தாய் எடுத்து எறிவோம்.ஏழுகடலையும் குடித்து ஏப்பம் விடுவோம். எண்ண முடியாத மணலையும் எண்ணி விடுவோம்.
  5. மண்டலங்களை கையால் மறைத்து விடுவோம்.வானத்தையும் வில்லாக வளைத்து விடுவோம்.தொண்டர்களுக்கு  ஞானத்தைச் (சூட்சமத்தை)சொல்லிக் காட்டுவோம்.
  6. அகண்டெரியும் நெருப்பிற்குள் மூழ்கி விடுவோம். திரிவேணி சங்கமம் போன்ற நீருக்குள் இருப்பினும் மூச்சடக்குவோம். சீறிவரும் கொடும் புலியைத் தாக்கி விடுவோம்.
  7. மூன்று உலகங்களையும் உயர்ந்த தங்கமாக்குவோம்.சூரியனின் கதிர்களையும் எங்களிடமிருந்து பிரகாசிக்கச் செய்வோம்.இப்பெரிய உலகத்தை இல்லாமல் செய்வோம்.
  8. பிரம்மா செய்த சிருஷ்டிகள் போல் வேறு செய்வோம். வேதனையும் எங்கள் கீழ் இருக்கச் செய்வோம். சிவனோடு நாங்களும் சமமாக வாழ்வோம்.
  9. 64 கலைகளையும் அறிந்தோம். அதற்குமேல் ஒரு கலையையும் அறிந்தோம். எப்பொருளின்மீதும் பற்றில்லா மனமும் கொண்டோம்.

 




சித்தர்களின் அரிய தகவல்கள்
  பதினெண் சித்தர்கள் துதி
- - - - - - - - - - - - - - - - - -
  சித்தர்களின் குலதெய்வம்
(வாலை-வாராஹி)
- - - - - - - - - - - - - - - - - -
  அகஸ்தியர் அருள்வாக்கு
- - - - - - - - - - - - - - - - - -
  கோரக்கச் சித்தரின் "சந்திரரேகை"
உலக மாற்றம்
- - - - - - - - - - - - - - - - - -
  கலியுதிப்பில்
(ஆண்ட மன்னர்கள் - இனி ஆளப்போவது)
- - - - - - - - - - - - - - - - - -
  வீர பிரமேந்திர சுவாமிகளின்   
காலக்ஞானம (கலிநடப்பு, முடிவு)
- - - - - - - - - - - - - - - - - -
  சித்தர்கள் வல்லபம்
- - - - - - - - - - - - - - - - - -
  சித்தர்கள் பரகாயப் பிரவேசம்
கூடுவிட்டுப் கூடுபாய்தல்
- - - - - - - - - - - - - - - - - -
  கோரக்கச்சித்தர், கருவூர்ச்சித்தர் கூறும்
இல்லறப் பெருமை

பிற தகவல்கள்
  சிவனிடம் கலி பெற்ற வரங்கள்
- - - - - - - - - - - - - - - - - -
  தர்ம சேனையின் கடமைகள்
- - - - - - - - - - - - - - - - - -
  வைகுண்டர் பிறக்க அடையாளம்
- - - - - - - - - - - - - - - - - -
  சன்மார்க்க பெரும்பதி வருகை
- - - - - - - - - - - - - - - - - -
  வகுப்புவாதத்தை வேரறுப்போம்
         Copyright @ 2010 Siddhar ulagam, Ponnamaravathi www.go4property.com