வாலையடா சித்தருக்குத் தெய்வந்தானே தெய்வமப்பா குலதெய்வஞ் சித்தர்கெல்லாம் சிறுபிள்ளை யரனுடைய தேவிதேவி வைவமப்பா நாங்களெல்லாம் சிரிப்பாளாத்தால் மணிவீட்டைப் போல்வல்லோ அண்டமெல்லாம் கொய்வமப்பா யெனவழிப்பாள் நிமிஷத்துள்ளே குறையாமற் படைத்திடுவான் கூடர்ந்துகூறு சைவமப்பா கொடுஞ்சைவம் வாமம் வேணுமே சதாநித்த மானந்தச் சத்திதானே.
- சட்டைமுனிவர் வாதசூத்திரத்திரட்டு