Blog Subtitle Blog Title

நீங்கள் நினைத்ததையெல்லாம் சாதிக்கலாம் சோடசக்கலையை பின்பற்றுங்கள்…!

By Biravar in News on June 10, 2021

நீங்கள் நினைத்ததையெல்லாம் சாதிக்கலாம் சோடசக்கலையை பின்பற்றுங்கள்…!!!

எப்படி சேட்டுக்கள்,மார்வாடிகள் எல்லாத் தலைமுறையிலும் செல்வந்தர்களாகவே இருக்கின்றனர் ?

எப்படி டாடாவும் பிர்லாவும்கோடிக்கணக்கில் சம்பாதிக்கின்றனர்?

இப்படி ஒருநாளாவது நீங்கள்சிந்தித்ததுண்டா ?

அவர்கள் தங்களது மாத வருமானத்தில் ஒரு பங்கை அந்த மாதமே அன்னதானம் செய்வதற்கு ஒதுக்கி அந்த மாதமே அன்னதானம் செய்துவிடுகின்றனர்.

இரண்டாவதாக, வீட்டை எப்போதும் குப்பைக்கூளம் இல்லாமலும், கெட்ட வாசனை அடிக்காமலும் பார்த்துக்கொள்கின்றனர்.அதாவது,வீட்டில் நறுமணம் எப்போதும்கமழுமாறு பார்த்துக்கொள்கின்றனர்.( எங்கே நறுமணம் உண்டோ அங்கே அஷ்ட லட்சுமிகளும் வாசம் செய்கிறார்கள்)

மூன்றாவது தான் இப்போது நாம் பார்க்கப்போவது . . ,

அமாவாசை ஆண்களை அதிகம் பாதிக்கிறது.

பவுர்ணமி பெண்களை அதிகம்பாதிக்கிறது.

அனைத்து உயிரினங்களையும் இந்த இரண்டு திதிகளும் பாதிக்கின்றன .சந்திரன் ஸ்தூல உடலையும், சூரியன் சூட்சும உடலையும் பாதிக்கின்றது.

வளர்பிறையில் பிரதமை முதல் பவுர்ணமி வரை 15 திதிகளும், தேய்பிறையில் பிரதமை முதல் அமாவாசை வரை 15 திதிகள் உள்ளன.

திதிகள் என்றால் கலைகள் என்றும் பெயர்ப்படும். 16 வதாக ஒரு கலை இருக்கின்றது.அதுதான் சோடேச கலை!

இந்த சோடேசக்கலையைப் பயன்படுத்தித்தான் சித்தர்கள், துறவிகள், மகான்கள்,செல்வந்தர்கள், சேட்டுகள், மார்வாடிகள் என வாழையடி வாழையாக செல்வந்தர்களாக இருக்க முடிகின்றது.

தமிழர்களாகிய நாமும் ஏதாவது ஒரு சித்தர் அவர்களின் வழிவம்சமாகத்தான் இருக்கிறோம்.இதை அறியும் வரை தின வாழ்க்கையே சோதனையாக இருக்கின்றது.

அறிந்ததுமுதல் நிம்மதி,செல்வ வளம், மகிழ்ச்சி,என வாழ்க்கைப்பாதை திசைமாறிவிடுகின்றது.

பிரம்மா, விஷ்ணு,சிவன் இம்மூவரின் அம்சமானவர்தான் திருமூர்த்தி ஆவார். இவர் இந்த சோடேசக்கலையில் தனது அருளை சில நொடிகள் மட்டுமே பொழிகிறார்.சுமார் ஐந்து நொடிகள் அதாவது ஐந்து சொடக்குப் போடும் நேரம் மட்டும் திருமூர்த்தியின் அருள் உலகம் முழுவதும் பரவும்.

திருமூர்த்தியை கிறிஸ்தவர்கள் Trinity எனச்சொல்வார்கள். இந்த 16 வது கலையை சித்தர்களும், முனிவர்களும் அறிந்திருந்ததால்தான் அவர்கள் விரும்பும் எந்த ஒன்றையும் பெற முடிகிறது.

அமாவாசை எப்போது முடிகிறது என்பதை உள்ளூர் பத்திரிகைகள் டிகிரிப்படி கணித்து வெளியிடும். அதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். உதாரணமாக, அமாவாசை காலை மணி 10.20 வரை. பின் பிரதமை திதி ஆரம்பம் என எழுதியிருப்பார்கள்.அமாவாசை திதி முடிவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பே அதாவது காலை 9.20 மணி முதல் 11.20 மணி தியானத்தில் அல்லது மந்திர ஜபத்தில் இருக்க வேண்டும்.இந்த இரண்டு மணி நேரத்திற்குள் சுமார் 5 நொடிப்பொழுதுகள் திருமூர்த்தியின் ஆளுகைக்குள் இந்த மொத்தப் பிரபஞ்சமும் வரும்.

பிரபஞ்சத்தில் உள்ள அத்தனை அண்டங்களும் ( நாம் வாழும் மில்கிவே, அருகில் உள்ள அண்ட்ராமீடா ),சகல உயிரினங்களும்( பாக்டீரியா, புல், பூண்டு ,மரம்,யானை, திமிங்கலம்,சிறுத்தை, கழுதை,புலி,முயல்,மான்,பாம்பு,நீர்யானை,நட்சத்திர மீன்,கணவாய் மீன், கடல்பசு,கடல் பாசிகள், ஒட்டகம்,ஒட்டகச்சிவிங்கி,பூரான்,பல்லி,ஆந்தை, புறா, கிளி, காட்டெருமை,காண்டாமிருகம், நாய்,குதிரை,கழுதை,
கோவேறுக்கழுதை,எறும்பு, சுறாமீன் ), ஒவ்வொரு மனிதனும் சூட்சுமமாக அதிரும்.

அந்த நேரம் மனதால் நாம் என்ன வேண்டுகிறோமோ அதுகிடைக்கும். கோரிக்கை ஒன்றாக இருக்க வேண்டும்.பலவாக இருக்கக்கூடாது. ஒன்று நிறைவேறிய பின் மற்றதை வேண்டலாம்.

இதேமாதிரிதான் பவுர்ணமி முடிந்து பிரதமை திதி ஆரம்பிக்கும்போதும் செய்ய வேண்டும். மாறிமாறி தொடர்ந்து இப்படி தியானம் அல்லது ஜபம் செய்யும் போது சில மாதங்களில் நமது கோரிக்கை நிறைவேறும்.சிலருக்கு ஒரே தடவையில் (கேட்டது) கிடைத்துவிடும்.

இது அவரவர் உடல் பூதியத்தைப் பொறுத்தது. மனவலிமையைப் பொறுத்தது.திருமூர்த்தி சாதனை செய்வோருக்கு ஒலியாகவோ,ஒளியாகவோ அருள் வழங்குகிறார்.

தியானம் வீட்டிலோ, கோயிலிலோ இருக்க வேண்டும். தியானம் செய்யும் நேரம் அமைதியாக இருப்பது அவசியம்.வெறும் தரையில் உட்காரக்கூடாது. வயிறுகாலியாக இருக்க வேண்டும். சைவ உணவு ஆன்மீக மன நிலையை உருவாக்கும். (அசைவ உணவு அதற்கு எதிரானநிலையைத் தரும்) .

நிமிர்ந்து ஏதாவது ஒரு ஆசனத்தில் இருக்கலாம்.உடைகள் இறுக்கமாக இருக்கக் கூடாது. மனக் கவனத்தை புருவ மத்தியில் அல்லது மூக்கின் நுனியை நோக்கி இருக்க வேண்டும்.

வாசியோகம் அல்லது ஏதாவது ஒரு மந்திர ஜபம் மனதுக்குள் உதடு அசையாமல் செய்யலாம்.மன ஒருமைப்பாட்டில் தேர்ச்சி உள்ளவர்களுக்கு மேற்சொன்ன இரண்டும் தேவையில்லை.

அமைதியுடன் வடகிழக்குப் பார்த்து கோரிக்கையை ( திருமணம்,பணக்காரனாவது, நோய் தீர, கடன் தீர,எதிர்ப்புகள் விலக, நிலத்தகராறுதீர, பதவி உயர்வு கிடைக்க, பிரிந்தவர் சேர ,வழக்கு வெற்றிஎதுவானாலும், ஏதாவது ஒன்று மட்டும் ) நினைத்த வண்ணம் கண்களை மூடி இருந்தால்போதும். தியான நேரம் பட்டினி இருந்தால் கிரகக்கதிர்வீச்சுக்கள் நம்மை அதிகம் பாதிக்காது. இந்த தியானத்தை ஜாதி, மதம்,இனம், மொழி கடந்து மனிதராகப்பிறந்த எவரும் செய்யலாம்.

இந்த தகவலைய் உலகுக்கு அறிவித்தது என் ஆன்மீக குருநாதர் திரு #ஸ்ரீம்மிஸ்டிக்செல்வம் ஐயா அவர்களே …

இம்மாத அமாவாசை சோடசக்கலை நேரம் 10/06/2021=வியாழக்கிழமை
மாலை 3:51pm முதல் 05:50pm வரை. .

ஸ்ரீம் அன்னை ஆதி பைரவர் வராஹி அறக்கட்டளை

5 comments Read The Discussion

Sivaraman N
Sivaraman N reply

Vanakkam Iyya,
Neengal sonna Sodasa kalai miga arumai nanri iyya. Ithai naan varum natkalil follow seikiten. Athil oru doubt enna venral sodasa neram 2 hours amavasai and piradhamai enru sollumpothu naan en appa ammavukkaga amavasai kimbittu padayal pottu kakathirku vaithu sapituven athanaal amavasai maalik fasting irupathu iyalaamal pokum. So antaya amavasai naal musivil varum sodasa nerathil naan eppadi fasting illamal meditation seivathu antha 2 hours il. Or amavasai padayal unavai saapotaalum paravaayillaiya iyaa. Naala vilakam tharavum. Nanri Iyya

Biravar
Biravar reply

ஸ்ரீம் மகேஷ்சுவாமி ஜீ யின் அன்னை ஆதிபராசக்தி சொர்ண ஆகர்சன மகா கால பைரவர் அஷ்வருட மகா வாராஹி அம்மன் மகா சித்தர் தவ பீடத்தை இந்த எண்ணில் தொடர்பு கொள்ளவும் 9894336164.

கேசவ ராஜன்
கேசவ ராஜன் reply

நல்ல பதிவு

Biravar
Biravar reply

ஸ்ரீம் மகேஷ்சுவாமி ஜீ யின் அன்னை ஆதிபராசக்தி சொர்ண ஆகர்சன மகா கால பைரவர் அஷ்வருட மகா வாராஹி அம்மன் மகா சித்தர் தவ பீடத்தை இந்த எண்ணில் தொடர்பு கொள்ளவும் 9894336164.

கேசவ ராஜன்
கேசவ ராஜன் reply

Nantri miga nantru

Post CommentLeave a reply

Your email address will not be published. Required fields are marked *

14 − 9 =