ஸ்ரீம் அன்னை ஆதி பராசக்தி சொர்ண ஆகர்ஷண பைரவர் அஷ்வாரூட மஹா வாராஹி அம்மன் மகா சித்தர் தவ பீடம்
By Aathi Biravar in News on May 8, 2021
இந்த பீட திருப்பணி வேலைகள் 2015 ம் வருடம் கடைசகயில் தொடங்கி 2018 ம் வருடம் நவம்பர் மாதம் தான் கும்பாபிஷேகம் நடைபெற்றது கிட்ட தட்ட 3 ஆண்டுகள் மிகுந்த சிரமப்பட்டு தான் முடித்தோம். நமது பீட ஆதிபராசக்தி, வாராஹி அம்மன் மற்றும் சொர்ண ஆகர்ஷண பைரவர், மகா கால பைரவர் படம் மற்றும் கும்பாபிஷேக, வருஷாபிஷேக அழைப்பிதழ்கள் கீழேயுள்ளது.
மேலும் நமது பீடத்தில் கன்னிமூலகணபதி, லெட்சுமி கணபதி என்று இரு கணபதியும் பழனி தண்டாயுதபாணியாக முருகனும், மகா மேருவுடன் அன்னை ஆதிபராசக்தியும், சொர்ண பைரவி அம்பாள் சமேதராக சொர்ண ஆகர்சன பைரவரும், காளி அம்சமாக பத்திரகாளி அம்மனும், குதிரை மேல் அமர்ந்த கோலத்தில் அஷ்வாரூட மஹா வாராஹி அம்மனும், சபரிமலை சாஸ்தாவாக ஐய்யப்பனும், கால சக்கரத்துடன் மகா கால பைரவர் தனது நாய் வாகனத்துடன் உலகில் வேறெங்கும் கான முடியாத பைரவராக இங்கு அரசாட்சி செய்கின்றார், மேலும் நாக அம்சமாக ராகு, கேது சிலைகளும் இங்குள்ளது.
மேலும் நமது பீடத்தில் அமைய பெற்ற ஒவ்வொரு தெய்வ திருமேனிக்கும் மாதத்தில் ஒரு நாள் சிறப்பு பூஜைகள் செய்ய வேண்டுமென தீர்மானித்து கன்னிமூலகணபதிக்கு சங்கடஹர சதர்த்தியும், லெட்சுமி கணபதிக்கு சுக்ல பட்ச சதுர்த்தியும், முருகனுக்கு விசாக நட்சத்திரமும், அன்னை ஆதிபராசக்திக்கு பொளர்ணமி பூஜை, தமிழ் மாத பிறப்பு, தமிழ் மாத கடைசி வெள்ளியும், வாராஹி அம்மனுக்கு வளர்பிறை, மற்றும் தேய்பிறை என்று இரு பஞ்சமி திதிகளும், சொர்ணாகர்ஷன பைரவருக்கு வளர்பிறை அஷ்டமி திதியும் மகா கால பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி பூஜைகளும் நடைபெற்று வருகின்றது.
மேலும் இங்குள்ள பத்திரகாளியம்மன் மற்றும் ஐயப்பனுக்கும் பொருளாதார சூழலுக்கேற்ப ஏதாவது செய்து கொண்டு இருக்கிறாம் இது வரையிலும் எந்த பூஜைக்கும் கட்டளைதாரர்கள் கிடையாது நமது பீடத்திற்கு வரும் பக்தர்களுக்காக தினமும் ஏதாவது ஒரு பிரசாதம் வழங்கி கொண்டு இருக்கிறாம்.
சென்ற வருட கொரனாவில் இருந்து சுக்ல பட்ச சதுர்த்தி, சுக்ல பட்ச அஷ்டமி, முருகனுக்குறிய விசாக நட்சத்திர பூஜைகள் எதுவும் நடத்த முடியவில்லை இதி்ல் என் உடல்நிலை வேர கொஞ்சம் சரி இல்லாத காரணத்தால் என்னால ஏதும் செய்ய முடியவில்லை.
மேலம் நமது பீடத்தில் பெரிய நிகழ்வாக சித்திரா பொளர்ணமி இந்த நாளில் அம்பாளுக்கு விஷேச அபிஷேக அலங்கார பூஜைகள் நடைபெறும்.
வைகாசி விசாகம் முருகனுக்குறிய விஷேச பிறந்த நாள் நட்சத்திரம் அன்றைய தினம் முருகனுக்கு விஷேச அபிஷேக அலங்கார என்று முருகனுக்கு சிறப்பாக பூஜைகள் நடைபெறும்.
ஆனி மாத அம்மாவாசையில் இருந்து 10 நாள் வாராஹி அம்மனுக்கு அஷடா நவராத்திரி விழா மிக சிறந்த முறையில் தினமும் யாக பூஜையுடன் நடைபெரும் இந்த பூஜையின் சிகர நிகழ்வாக 10ம் நாள் வாராஹி அம்மன் திருக்கல்யாணமும் அதோடு கல்யாண விருந்து சாப்பாட்டுடன் நிறைவு பெரும்.
ஆடி மாதம் கடைசி வெள்ளி அன்று மூன்று அம்பாளுக்கம் ஆதிபராசக்தி, பத்திரகாளி, வாராஹி அம்மனுக்கும் சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் நடைபெற்று இரவு அன்னதானத்துடன் மினி கொடை மாதிரி நடைபெறும். ஆடி மாத வரும் ஒவ்வொரு செவ்வாயும், வெள்ளியும் அம்பாளுக்கு கூழ் அல்லது கஞ்சி காய்ச்சி பூஜைகள் நடைபெறும்.
ஆவணி மாதம் இரண்டு விநாயகருக்கு விநாயகர் சதுர்த்தி பூஜை மிக சிறப்பாக நடைபெறும்.
புரட்டாசி மாதம் ஆதிபராசக்திக்கு 10 நாள் நவராத்திரி பூஜைகள் தினம் ஒரு அலங்காரத்துடன் மிக சிறப்பாக நடைபெறும்.
ஐப்பசி மாதம் நமது பீட வருஷாபிஷேகம் மிக சிறந்த முறையில் விஷேச ஹோமம், அபிஷேகம், அலங்காரம், பால்குடம் மூன்று வேலை அன்னதானத்துடன் மிக சிறப்பாக நடைபெறும்.
கார்திகை மாதம் பொளர்ணமி அம்பாளுக்கு விஷேச அபிஷேக அலங்காரம் முடித்து சொக்க பானை ஏற்றும் நிகழ்வு மிக சிறப்பாக நடைபெறும். இந்த மாதம் பைரவர் பிறந்த அஷ்டமி வவருவதால இரு பைரவருக்கும் விஷேச ஹோமம்,அபிஷேக ,அலங்காரத்துடன் அன்ன படையலுடன் அன்னதானமும் நடைபெறும் .
மார்கழி மாதம் தினமும் அதி காலை 03 : 00 மணிக்கு கோயில் நடை திறந்து பிரம்ம முகூர்த்தத்தில் தினமும் இரண்டு பிரசாதங்கள் போட்டு மார்கழி மாதம் முழுக்க சிறப்பாக பூஜைகள் நடைபெறும்.
தை மாதம் பிறப்பு பொங்கல் வைக்கும் வைபவம் மற்றும் மதியம் அன்ன படைப்பு மிக சிறப்பாக நடைபெறும். மேலும் தை மாத எல்லா வெள்ளிக்கிழமையும் அம்பாளுக்கு விஷேச அபிஷேக அலங்கார பூஜைகள் நடைபெறும்.
மாசி மாதம் வரும் சிவராத்திரி 4 கால பூஜையும், மாசி மகம் அன்றும் அம்பாளுக்கு விஷேச அபிஷேக அலங்கார பூஜைகள் நடைபெறும்.
பங்குனி மாத வருகின்ற உத்திர நட்சத்திரத்தில் ஐயப்பனுக்கு விஷேச அபிஷேக அலங்கார பூஜைகள் நடைபெறும்
இதெல்லாம் வருடம் ஒரு முறை நடக்கும் பூஜைகள் இந்த நாள்ல மாத பூஜைகள் பஞ்சமி, சதுர்த்தி, அஷ்டமி பூஜைகள் வந்தாலும் அதுவும்கூட தனியாக நடைபெறும்.
இதில் எந்த விதமான பூஜைக்கும் கட்டளைதாரர்கள் கிடையாது கட்டளைதாரர்கள் வரவேற்க படுகின்றனர் பக்தர்கள் தங்களால் முடிந்தால் முடிந்த உதவிகளைய் செய்யும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
மேலும் அறக்கட்டளை ஆரம்பித்தால் உதவிகள் கிடைக்கும் என்றார்கள் 2019ம் வருடம் 7வது மாதம் ஸ்ரீம் அன்னை ஆதி பைரவர் வாராஹி அறக்கட்டளை என்ற பெயரில் ஒரு அறக்கட்டளையும் தொடங்கி நடத்தி வருகின்றோம் இது வரையிலும் எந்த உதவியும் வரவேயில்லை.
மேலும் நமது பீடத்திற்காக ஆதிபராக்தி அம்மன் மகா மேருவுடன், அஷ்வாரூட மஹா வாராஹி அம்மன், சொர்ணாகர்ஷன பைரவர், மகா கால பைரவர் ஆகிய திருமேனிகளுக்கு ஐம்பொன் உற்சவர் சிலை செய்ய தீர்மானித்தோம் இதில் முதலில் மஹா வாராஹி அம்மன் உற்சவர் ஐம்பொன் சிலை செய்ய ஆகும் பணம் அனைத்தும் தான் ஒருவர் மட்டுமே மொத்தமாக தருகிறேன் என்று கோயமுத்தூரில் உள்ள அன்பு பக்தைய் வெண்ணிலா நாகராஜன் ஏற்றுக் கொண்டார் . அந்த வாராஹி அம்மனை பிராண பிரதிஷ்ட செய்யலாம் என முடிவெடுக்கும் போது வாராஹி அம்மன் தனது ஜோடி உன்மத்த பைரவருடன் தான் அமர்வேன் என கூறினால் இதற்காக இப்பொழுது உன்மத்த மகா கால பைரவர், சொர்ணாகர்ஷன பைரவர் என இரு உற்சவ ஐம்பொன் சிலைகள் செய்வதற்காக முதல்ல மெழுகு உருவ மாதிரி சிலை செய்து ரெடியாக உள்ளது மெட்டல் வாங்கினால் உடனடியாக உருக்கி ஊற்றி ஐம்பொன் சிலை ரெடி ஆனால் கையில் பணம் இல்லை பக்தர்கள் உதவினால் உடனடியாக இரு பைரவர்களும் ரெடியாகி விடுவார்கள் எனது முகநூலில் 5000 நண்பர்களும் மேலும் வெய்டிங் லிஸ்ட்ல 1000 நபரும் இருக்கின்றனர் ஆளுக்கு Rs.100 கொடுத்தாலும் இதற்க்குள் வேலைய முடித்து பைரவர் சிலையை கொண்டு வந்திருக்கலாம்.
நண்பர்களே தங்களால் முடிந்தால் முடிந்த உதவிகளைய் செய்து பைரவர் அருள் பெற்று பல்லாண்டு வாழ்க என வாழ்த்தி வேண்டிக் கொள்கிறேன்.
மேலும் நமது பீடத்திற்காக தாயாராகி கொண்டிருக்கும் இரு பைரவர்களின் மெழுகு மாதிரி டைமேக்கிங் சிலை படம் கீழே உங்க பார்வைக்காக கொடுக்கிறேன்.




SrimMahesh Samyji #0m_siva_siva_om
நமது தூத்துக்குடி விஸ்வபுரம் #ஸ்ரீம்மகேஷ்சுவாமி_ஜீ மகா சித்தர் தவ பீடத்தில் இந்த வருட வைகாசி விசாக பூஜை 25.05.2021 செவ்வாய் கிழமையன்று காலை 11:00 மணிக்கு மேல் மிக சிறப்பாக நடைபெற்றது.
நமது பீடத்தில் முருகனுக்கு பிறந்த நாளான இன்று 25.05.2021 செவ்வாய்கிழமை வைகாசி விசாக நட்சத்திர பூஜை பக்தர்களின் ஒத்துழைப்போடு மிக சிறப்பாக நடைபெற்றது.
அந்த பூஜையில் நடைபெற்ற நமது பீட முருகன் பழநி தண்டாயுதபாணியின் அபிஷேகம், அலங்காரம், மற்றும் விசேஷ அன்னப் படைப்பு பூஜைகள் உங்களுக்காக
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
ஓம் ஸ்ரீசொர்ணபைரவா போற்றி
ஸ்ரீ காலபைரவர் திருவடிகளே போற்றி.