வைகாசி மாத அஷ்டமி சதாசிவாஷ்டமி
By Biravar in News on June 3, 2021
☘☘☘☘☘☘☘☘
பைரவ வழிபாட்டிற்கு வளர்பிறை மற்றும் தேய்பிறை அஷ்டமி, தேய்பிறை சஷ்டி, மாத பரணி நட்சத்திரம் மற்றும் ஞாயிறு மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரை மிகவும் ஆற்றல் அளிக்கும் நாட்களாகும்.
☘
பைரவருக்குண்டான பொது காயத்ரி
☘
சுவாநத் வஜாய வித்மஹே சூலஹஸ்தாய தீமஹி
தந்தோ பைரவ பிரசோதயாத்
☘
பைரவரின் காயத்ரியை அஷ்டமி தினத்தில் சொல்லி வரலாம். அருகில் இருக்கும் ஆலயத்துக்குச் சென்று பைரவரை வழிபடலாம். நவக்கிரக தோஷங்கள் நீங்க சதுர்கால பைரவருக்கு செவ்வரளி பூவால் 9 வாரங்கள் சகஸ்ரநாமா அர்ச்சனை செய்ய வேண்டும். வறுமை நீங்க வளர்பிறை அஷ்டமிகளில் ராகு கால நேரத்தில் வில்வம் மற்றும் வாசனை மலர்களால் அஷ்டோத்திரமோ, சகஸ்ரநாமமோ அர்ச்சனை செய்து 11 பைரவ தீபங்கள் ஏற்ற வேண்டும். அஷ்டமிகளில் தொடர்ந்து வழிபடவேண்டும்.
☘️
புதன்கிழமை அன்று ராகு காலத்தில் மரிக்கொழுந்து மாலை அணிவித்து, பயத்தம் பருப்பு சாதம் படைத்து அர்ச்சனை செய்ய, மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்கலாம்; தடையின்றி விரும்பிய கல்வியைக் கற்று முதலிடம் பெறலாம்.
☘️
புதன்கிழமை மிதுனம், கன்னி ராசிக்காரர்கள் மற்றும் ஆயில்யம், கேட்டை, ரேவதி நட்சத்திரகாரர்கள் இந்த கிழமையில் பைரவரை வழிபடுவது சிறப்பான பலன்களை தரும். புதன் கிழமையில் நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் பூமி லாபம் கிட்டும்.
சொர்ண பைரவ மந்திர ரகசியம்!
சொர்ண பைரவரின் மந்திரம் ஒன்றினை பகிர்ந்து கொள்கிறேன். இந்த மந்திரம் அகத்தியரால் தனது “அகத்தியர் பரிபாஷை” என்னும் நூலில் அருளப் பட்டிருக்கிறது. தொழில் முனைவோருக்கும், செய்தொழில் வெற்றிகள் வேண்டுவோருக்கும், பொருள் தேடும் முயற்சியில் சுணங்கியிருப்போருக்கும் இந்த மந்திரம் உதவுமென்கிறார் அகத்தியர்.
இந்த மந்திரத்தின் மகிமையை அகத்தியர் பின்வருமாறு விளக்குகிறார்.
தான்பார்க்குந் தொழிற்கெல்லாம் வயிரவனும்வேணும்
தன்மையுடன் தொட்டதெல்லாம் பலிக்கும்பாரே
மான்பார்த்த சிவகிருபை யிருந்துதானால்
மக்களே செய்தொழிலும் பங்கமாமோ
கோன்பார்த்தக் குருமுடிக்க அருகில்நின்று
குணங்குறிகள் தவறாமல் மனதிற்றோணி
வான்பார்த்த கருவெல்லாம் வெளியதாக
மக்களே தோணுமடா மகிழ்ந்துபாரே.
செய்யும் தொழில்கள் எல்லாவற்றிற்கும் சொர்ணபைரவர் அருள் வேண்டுமாமாம். அப்படி அவர் மந்திரம் சித்தித்தால் தொட்டதெல்லாம் பலிக்கும் என்கிறார் அகத்தியர். மேலும் சிவபெருமானின் கருணை இருந்தால் செய்யும் தொழிலில் பங்கமே வராது என்கிறார். அதற்கு வைரவர் துணை என்றென்றும் வேண்டும். செய்தொழிலில் குணம் குறைகள் மனதில் தோன்றி தவறுகள் நேராது காக்க இந்த மந்திரம் உதவுமென்கிறார். அத்துடன் எல்லா உண்மைகளும் வெளிப்படையாகத் தோன்றும் மகிழ்ந்து பார் என்றும் சொல்கிறார்.
இத்தனை சிறப்பு வாய்ந்த மந்திரம் என்ன?.அதை எப்படி பயன் படுத்துவது என்பதை பின்வருமாறு அருளுகிறார்.
பண்ணப்பா சொர்ணவயி ரவன்றன் பூசை
பாங்கான மந்திரத்தைச் சொல்லக் கேளு
எண்ணப்பா ஓங்கென்றும் ஸ்ரீங்கென்றுந்தான்
என்முன்னே சொர்ணரூபா வாவாவென்றும்
கண்ணப்பா நானெடுத்த கருவெல்லாந்தான்
கைவசமாய்ச் செய்துவைக்க வாவாவென்று
சண்ணப்பா நூற்றெட்டு உருவேயானால்
தன்வசமாய் போகுமடா தான்பார்ப்பீரே.
“ஓங் ஸ்ரீங் என் முன்னே சொர்ணரூபா வாவா. நான் எடுத்த கருவெல்லாம் கைவசமாய் செய்து வைக்க வாவா” என்பதுதான் சொர்ண பையிரவரின் மந்திரம். இதனை நூற்றி எட்டு உரு செபித்தால் மந்திரம் சித்தியாகுமாம் என்கிறார்.
மேலும் இந்த மந்திரத்தை யாரிடம் உபதேசம் வாங்கிட வேண்டும் என்பதையும் குறிப்பிட்டிருக்கிறார்.
பாரடா தவமுனிவர் சித்தரெல்லாம்
பண்பாக மறைத்ததென்ன உட்கருவின்மூலம்
நேரடா வெளிக்கருவின் மூலந்தானும்
நெகிழாமற் பலவிதமாய்ச் சொல்லிவைத்தார்
காரடா யிக்காண்டந் தன்னிற்றானும்
கண்மணியே காணுதற்கு வகையாய்ச்சொன்னேன்
ஆரடா அறிவார்கள் குருசொல்லவேணும்
அல்லதா லின்னூலே சொல்லும்பாரே.
சித்தர்கள், தவமுனிவர்கள், மறைத்ததெல்லாம் என்ன? உட்கருவின் மூலத்தை வெளிப்படையாகச் சொல்லாது மறைத்து வைத்தார்கள். அதையும் இந்தக் காண்டத்தில் உனக்கு தெளிய வைத்து விட்டேன் என்று சொல்லும் அகத்தியர், இதனை வேறு யாரும் சொல்ல மாட்டார்கள் என்கிறார்… குருவாக இருப்பவர்களே இந்த மந்திரத்தை உபதேசிக்க வேண்டும். அப்படி குரு இல்லாதவர்களுக்கு இந்நூலே குருவாக இருந்து சொல்லும் என்றும் சொல்கிறார்.
எனவே, எல்லாம் வல்ல குருநாதரை மனதில் தியானித்து மிகவும் எளிதான இந்த மந்திரத்தை பயன்படுத்தி, நீங்கள் எடுக்கும் எல்லா முயற்சிகளின் ஊடாக நலமும், வளமும் பெற குருவருள் துணை நிற்கட்டும்.
மேலும் நமது தூத்துக்குடி மாநகரம் விஸ்வபுரம் முதல் தெருவில் #ஸ்ரீம்மகேஷ்சுவாமி_ஜீ மகா சித்தர் தவ பீடத்தில் மகா கால பைரவர், சொர்ணாகர்ஷன பைரவர் என்று இரு பெரும் பைரவர்கள் அரசாட்சி செய்கிறார்கள் இந்த இரு பெரும் பைரவ திருமேனிகளுக்கும் புதிதாக ஐம்பொன்னால் ஆன உற்சவ மூர்த்திகள் செய்ய வேண்டி உள்ளது
அதற்காக பக்தர்கள் தங்களால் முடிந்தால் முடிந்த உதவிகள் செய்து இந்த பைரவ திருமேனிகள் செய்ய உதவலாம் இதன் மூலமாகவும் உங்கள் தோஷங்கள் அனைத்தும் நிவர்த்தியாகும் இந்த பைரவர்கள் அருளால் உங்களுக்கும் உங்களுக்கு பின்னால் வரும் தலைமுறையினர்க்கும் இந்த பைரவர் இருக்கும் காலம் வரை புண்ணியம் கிடைக்கும்.
இந்த புண்ணிய காரியத்தில் பங்கேற்க தங்களால் முடிந்தால் முடிந்த உதவியை இந்த வங்கி கணக்கில் செலுத்தலாம்.
Maheshkumar
Acc.. 20469779163
Ifsc.. SBIN0017124
MICR.. 627002045
Swiftcode.. SBININBB
STATE BANK OF INDIA
TUTICORIN BRANCH
Google pay.. +91 98943 36164
Phone pay.. +91 98943 36164
ஓம் பைரவா போற்றி ஸ்ரீ காலபைரவர் திருவடிகளே போற்றி.