Blog Subtitle Blog Title

பைரவரை போற்றும் தேவாரம் பாடல்

By Biravar in News on June 20, 2021

தோஷம், பிரச்சனை, கடன் தொல்லை போன்ற பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த ஸ்லோகத்தை தினமும் அல்லது பைவரருக்கு உகந்த நாட்களில் சொல்லி வந்தால் பலன் அடையலாம்.

விரித்த பல்கதிர்கொள் சூலம்
வெடிபடு தமருகம்கை
தரித்ததோர் கோலகால பைரவனாகி

வேழம் உரித்து உமை அஞ்சக் கண்டு
ஒண்திருமேனி வாய் விள்ளச்
சிரித்தருள் செய்தார் சேறைச்
செந்நெறிச் செல்வனாரே

திருச்சேறை ஸ்தலத்தில் (கும்பகோணம் திருவாரூர் பாதையில் உள்ள ஸ்தலம்) சாரபரமேஸ்வரர் ஆலயத்தில் காலபைரவர் அற்புதமாகக் காட்சி தருகிறார். அவரை வழிபட்ட திருநாவுக்கரசர் பாடிய பதிகம் இது.

மேலும் அடுத்த மாதம் 09.07.2021 அம்மாவாசை அன்றில் இருந்து 10 நாட்கள் அஷடா நவராத்திரி இந்த நவராத்திரி வாராஹி அம்மனுக்கான நவராத்திரி இந்த உற்சவத்தின் நிறைவு நாளில் வாராஹிக்கும் உன்மத்த பைரவருக்கும் திருக்கல்யாணம் வைபவம் நடைபெறும் இந்த இடைப்பட்ட காலத்திற்க்குள் நமது பீடத்திற்காக உன்மத்த மகா கால பைரவர், சொர்ணாகர்ஷன பைரவர் என்று இரு பைரவருக்கும் ஐம்பொன் உற்சவ திருமேனிகள் செய்ய முடிவு செய்தோம் இது கொரோனா காலம் என்பதால் முடியவில்லை இப்பொழுது நாம் உன்மத்த மகா கால பைரவர் ஐம்பொன் சிலையைய் மட்டும்மாவது செய்து நமது பீடத்திற்கு கொண்டு வர வேண்டிய கால கட்டத்தில் உள்ளோம் இதற்காக பக்தர்கள் இந்த கஷ்ட காலத்திலும் தங்களால் முடிந்த உதவிகளைய் செய்து உன்மத்த மகா கால பைரவர் நமது பீடத்திற்க்கு வர உதவுங்கள் மேலும் குருவருளும், திருவருளும் பெற்று வாழ்வாங்கு வாழ வேண்டுமென வாழ்த்தி வேண்டிக் கொள்கிறேன்.

எல்லோருக்கும் எப்போதும் நல்லதே நடக்க நம் உன்மத்த மகா கால பைரவசுவாமி துணை நின்று திருவருள் புரிவார் !

மேலும் நமது பீடத்தில் இந்த வருடமும் ஆனி மாதம் அம்மாவாசையில் இருந்து பத்து நாட்கள் அஷடா நவராத்திரி உற்சவம் நடைபெற இருக்கின்றது. 09.07.2021ல் வெள்ளிக்கிழமை அம்மாவசை அன்று தீர்த்தவாரி மற்றும் மாகாப்பு அலங்காரத்துடன் தொடங்கி 19.07.2021 வரை பத்து நாட்கள் தினமும் ஹோமம், அபிஷேகம் ஆலங்காரம் விஷேச பைடயலுடன் சிறப்பு பூஜைகள் நடைபெறும். கடைசி நாள் அன்று திருக்கல்யாண வைபவத்துடன் மக்களுக்கு சிறப்பு கல்யாண விருந்து சாப்பாட்டுடன் உற்சவம் நிறைவுறும்.

இந்த உற்சவ நிகழ்வுக்கும் கட்டளைதாரர்கள் வரவேற்க படுகின்றனர் இதற்கும் பக்தர்கள் தங்களால் முடிந்தால் முடிந்த உதவிகள் செய்யலாம்.

Post CommentLeave a reply

Your email address will not be published. Required fields are marked *

five × five =