ஆவணி மாத தேய்பிறை பஞ்சமி பூஜை
By Biravar in Events on September 1, 2021
நமது தூத்துக்குடி விஸ்வபுரம் #ஸ்ரீம்மகேஷ்சுவாமி_ஜீ மகா சித்தர் தவ பீடத்தில் அஷ்வாரூட மஹா வாராஹி அம்மனுக்கு இந்த ஆவணி மாத தேய்பிறை பஞ்சமி பூஜை 27.08.2021 வெள்ளிக் கிழமையன்று காலை 10:00 மணிக்கு மேல் மிக சிறப்பாக நடைபெற்றது.
மேலும் நேற்று 30.08.2021 திங்கட்கிழமை ரோகிணி நட்சத்திரத்துடன் கூடிய தேய்பிறை அஷ்டமியில் நமது பீட மகா கால பைரவருக்கு அன்று காலை 10:00 மணிக்கு மேல தேய்பிறை அஷ்டமி பூஜை நடைபெற்றது.
இந்த பூஜையில் நடைபெற்ற அபிஷேக அலங்கார மற்றும் தீபாரதனை காட்சிகள் கீழுள்ள லிங்க் வழியாக கண்டு மகிழலாம்.
இந்த YouTube சேனல் நமது பீடத்திற்காக உருவாக்கி உள்ளோம் இந்த சேனலில் தூத்துக்குடி நமது பீடத்தில் நடைபெறும் அனைத்து விசேஷ அபிஷேகம் மற்றும் அலங்கார வீடியோக்களும் இதில் பதிவேற்றம் செய்யப்படுகிறது.
நமது நட்பு வட்டாரத்தில் இருக்கும் அனைத்து உறுப்பினர்களும் இந்த சேனலை subscribe செய்து இந்த YouTube சேனல் பெரிய அளவில் வளர்ச்சி அடைய செய்து அருள்பெருங்கள்.
மேலும் நமது பீடத்தில் உள்ள அஷ்வாரூட மஹா வாராஹி அம்மனுக்கு நடைபெற்ற 27.08.2021 வெள்ளிக்கிழமை ஆவணி மாத தேய்பிறை பஞ்சமி பூஜைகளைய் கண்டு மகிழலாம்.
மேலும் நமது நமது பீடத்தில் உள்ள மகா கால பைரவருக்கு நடைபெற்ற 30.08.2021 திங்கட்கிழமை ஆவணி மாத தேய்பிறை அஷ்டமி பூஜைகளைய் கண்டு மகிழலாம்.
ஸ்ரீம் அன்னை ஆதி பைரவர் வராஹி அறக்கட்டளை