Blog Subtitle Blog Title

பைரவர்பற்றிய அபூர்வதகவல்கள் மற்றும் பைரவமுகூர்த்தம்

By Biravar in News on April 28, 2021

24 நிமிடங்கள் கொண்டது ஒரு நாழிகை. இவ்வாறு நான்கு நாழிகைகள் சேர்ந்ததே அதாவது ஒன்றரை மணி நேரமே ஒரு முகூர்த்தம் எனப்படும். இது பொதுவான கணக்கு. மேலும், முகூர்த்தம் என்பது புனிதமான காலம் என்றும் பொருள்படும். இடத்தைப் பொறுத்தும், காரியத்தைப் பொறுத்தும் முகூர்த்தத்தின் கால அளவு மாறுபடும் என்பது உண்மையே. உதாரணமாக, சன்னியாசி என்பவர் ஒரு பசு மாடு பால் கறக்கும் நேர அளவிற்குத்தான் ஒரு வீட்டின் முன்பு பிச்சை யாசிப்பதற்காக நிற்கலாம் என்பது சன்னியாச முகூர்த்தம். கோதூளி முகூர்த்தம் என்பது பசு மாடுகள் காலையில் புல் மேய்வதற்காக செல்லும் நேரமாகும். எனவே இத்தகைய முகூர்த்தங்களுக்கு இத்தனை மணி, நிமிடம் என்ற கால வரையறையை நிர்ணயிக்க முடியாது.

சித்தர்கள் கணக்கில் பிரம்ம முகூர்த்தம் என்பது விடியற் காலையில் மூன்றரை மணி முதல் ஐந்தரை மணி வரைக்கும் உள்ள நேரமாகும். அபிஜித் முகூர்த்தம் என்பது நண்பகல் நேரமாகும். இதுவும் கால தேச மாறுபாடு உடையதே. இத்தகைய முகூர்த்த நேரத்தின் இடையில்தான் சித்தர்கள் கணக்கிடும் அமிர்த நேரம் என்ற சித்த முகூர்த்தங்கள் அமைகின்றன. சித்தாமிர்த நேரம் ஒரு நிமிடம் மட்டுமே அமையும்.

அதுபோல பைரவ முகூர்த்தம் என்ற அற்புதமான முகூர்த்த நேரம் உண்டு. சித்தர்களின் கிரந்தங்களில் மட்டுமே காணப்படும் இந்த அற்புத அமிர்த நேரத்தை முதன்முதலாக உலகிற்கு வழங்கியவரே நமது ஸ்ரீவெங்கடராம சுவாமிகள் ஆவார்கள்.சூரிய உதயத்திற்கு முன்னும் பின்னும் உள்ள நான்கு நிமிட நேரமே பைரவ முகூர்த்தம் என்று வழங்கப்படுகின்றது. உதாரணமாக, ஒரு நாள் காலை சூரிய உதயம் 6 மணி 12 நிமிடம் என்று வைத்துக் கொண்டால் சூரிய உதயத்திற்கு முன்னால் உள்ள நான்கு நிமிடங்களும் சூரிய உதயத்திற்குப் பின் உள்ள நான்கு நிமிடங்களும், அதாவது 6 மணி 8 நிமிடத்திலிருந்து 6 மணி 16 நிமிடம் வரை உள்ள எட்டு நிமிட நேரமே பைரவ முகூர்த்தம் என்று சித்தர்களால் வரையறுக்கப்பட்டுள்ளது.

திருமணம், கிரகப்பிரவேசம் போன்ற எந்த நற்காரியத்திற்கும் முகூர்த்தம் லக்ன நேரம் குறித்துதான் காரியங்களை நிகழ்த்த வேண்டும் என்பது நீங்கள் அறிந்ததே. ஆனால், போதிய ஜோதிட ஞானம் இல்லாதோரும் சூழ்நிலை காரணங்களால் இத்தகைய முகூர்த்த லக்னங்களில் நற்காரியங்களை நிகழ்த்த இயலாதபோது மேற்கூறிய முகூர்த்தங்கள் நற்காரிய சித்தி அளிக்கவல்லதாய் அமைகின்றன. சூன்ய திதி, அசம்பூர்ண நட்சத்திரங்கள், பகை ஹோரைகள் போன்ற பற்பல பஞ்சாங்க தோஷங்களைக் களையக் கூடிய சக்தியை உடையதே அபிஜித் போன்ற விசேஷ முகூர்த்தங்கள் ஆகும்.

இவ்வாறு பைரவ முகூர்த்த நேரத்தில் இயற்ற வேண்டிய வழிபாடுகள் ஏராளமாக உண்டு. அவ்வழிபாடுகள் நாம் காலத்தை முறையாகப் பயன்படுத்தாத தோஷங்களுக்கு ஒரளவு பரிகாரமாக அமைகின்றன. சித்தர்கள் அருளிய பைரவ முகூர்த்த நேரத்தைக் குறிப்பதே பைரவ மூர்த்திகளின் வாகனமாய் எழுந்தருளியுள்ள நாய்களின் வால் பகுதியாகும். எந்த அளவிற்கு பைரவ மூர்த்திகளின் வாகனங்களின் வால் பகுதியைத் தியானித்து வழிபாடுகளை மேற்கொள்கிறோமோ அந்த அளவிற்கு பைரவ முகூர்த்தத்தைப் பற்றிய ரகசியங்களை நாம் தெரிந்து உணர்ந்து அதை நற்காரிய சித்திக்குப் பயன்படுத்த முடியும் என்பது சித்தர்களின் அறிவுரை,பைரவ வாகனத்தின் வால் பகுதியில் அப்படி என்ன விசேஷம் விரவி உள்ளது? பைரவ வாகனம் என்பது தர்ம தேவதையே. எம்பெருமானின் வாகனமான நந்தி மூர்த்தியாகவும் தர்ம தேவதை எழுந்தருளி உள்ளது நாம் அறிந்ததே. கிருத யுகத்தில் நான்கு கால்களில் திரமாக நின்ற தர்ம தேவதை தற்போதைய கலியுகத்தில் ஒரே ஒரு காலில் மட்டும்தான் நிற்கின்றது. எனவேதான் எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, திருட்டு போன்ற தகாத நிகழ்ச்சிகளையே நாம் சந்திக்கிறோம்.இத்தகைய தகாத நிகழ்ச்சிகள் நம்மைத் தாக்காது நம்மைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டுமானால் தர்ம தேவதையின் ஆசீர்வாத சக்திகளை நாம் பெற்றாக வேண்டும். கலியுகத்தில் பூமியில் நிலை கொண்டிருக்கும் தர்ம தேவதையின் நாலாவது கால்தான் பைரவ வாகனத்தின் வால் பகுதியாகும். நாம் பைரவ வாகனத்தின் வால் பகுதியைத் தியானித்து வழிபாடுகள் இயற்றும் அளவிற்கு நாம் தர்ம தேவதையின் அனுகிரக சக்திகளைப் பெற்றவர்கள் ஆகிறோம்.பைரவ வாகனத்தில் வால் பகுதியைப் பொறுத்து பைரவ மூர்த்திகளின் அனுகிரக சக்திகளும் பலவிதமாய் பரிமாணம் கொள்கின்றன.

உதாரணமாக,பைரவ வாகனத்தின் வால் பகுதி சுருட்டிக் கொண்டு வட்ட வளையம் போல் இருக்கும். இந்த பைரவ மூர்த்திகள் தர்ம சக்கர பைரவ மூர்த்திகள் என்றழைக்கப்படுகின்றனர். பூமி சூரியனைச் சுற்றும் கால அளவை இந்த பைரவ மூர்த்திகள் நிர்ணயிப்பதால் இரவில் செய்ய வேண்டிய காரியங்கள், பகலில் செய்ய வேண்டிய காரியங்கள் போன்றவற்றில் ஏற்படும் குழப்பங்கள், அவற்றால் ஏற்படும் கால தோஷங்கள் இவற்றை இத்தகைய பைரவ மூர்த்திகள் களைகிறார்கள்.

கணவன் மனைவி இவர்களுக்கு இடையே உள்ள தாம்பத்திய உறவிற்கு இரவு நேரமே ஏற்றது. பகல் நேர புணர்ச்சி நரம்புக் கோளாறுகளையும் சந்ததிகளின் அவயவ குறைபாடுகளையும் தோற்றுவிக்கும்,அதே போல பகலில் தூங்குவதும் உட்கார்ந்த, நின்ற நிலையில் தூங்குவதும் உடல் நலத்திற்கு உகந்ததன்று. இரவு நேர எண்ணெய்க் குளியலும் ஆரோக்கியத்தை அளிக்காது.இரவு நேரப் பயணங்களும், இரவில் நெடு நேரம் கண் விழித்லும் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும்.இது போன்ற பகலிரவு கர்ம மாறுபாடுகளில் ஏற்படும் தோஷங்களை ஓரளவு நிவர்த்தி செய்வதே தர்ம சக்கர பைரவ மூர்த்திகள் வழிபாடாகும்.

பைரவ வாகன மூர்த்திகளின் வால் பகுதி கொடியைப் போல் மேல் பகுதியில் வளைந்திருக்கும். இத்தகைய வாகனங்களை உடைய பைரவ மூர்த்திகள் தர்மக் கொடி பைரவ மூர்த்திகள் என்று அழைக்கப்படுகின்றனர். பதவி, செல்வாக்கு, பணம், ஆரோக்கியம் போன்ற நிலைகளில் உயர் நிலையிலிருந்து விதி வசத்தால் தாழ்ந்த நிலையை அடைந்தவர்கள் வழிபட வேண்டிய மூர்த்தியே தர்மக் கொடி பைரவ மூர்த்தி ஆவார்.
நீதிபதிகள், ஆட்சியாளர்கள், மந்திரிகள் திடீரென்று பல்வேறு காரணங்களால் தங்கள் பதவியை இழந்து வாடும்போது அவர்களை இதுவரை அண்டியிருந்த நண்பர்கள், உறவினர்கள், ஆதரவாளர்கள் அனைவரும் மறைந்து விடுவார்கள். இது அன்றாடம் நடக்கக் கூடிய நிகழ்ச்சியாகும். ஆனால், இத்தகைய துன்பங்களால் பாதிக்கப்படும்போதுதான் அதன் உண்மை வேதனை புரிய வரும். இத்தகைய எதிர்பாராத துன்பங்களைச் சந்திக்க வேண்டிய இக்கட்டான சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டவர்கள் வழிபட வேண்டிய மூர்த்தியே, தர்மக் கொடி பைரவர் ஆவார், மன அமைதியையும் தன்னம்பிக்கையையும் அளிக்க வல்லதே தர்மக் கொடி பைரவ மூர்த்தியின் வழிபாடாகும்.

பைரவ மூர்த்திகளின் வாகனங்கள் வலது புறம் நோக்கியும் இடது புறம் நோக்கியும் பார்த்தவாறு அமைவதுண்டு. பைரவ மூர்த்திக்கு இடது புறம் பார்க்கும் வண்ணம் வாகனம் அமைந்த மூர்த்தி ஆடபீஜ பைரவ மூர்த்தி என்றும், பைரவ மூர்த்திக்கு வலப் புறம் பார்க்கும் வண்ணம் அமைந்த வாகனத்தை உடையவர் மகபீஜ பைரவ மூர்த்தி என்றும் அழைக்கப்படுகிறார்.எண்ணிக்கை குறைவு, அடர்த்திக் குறைவு போன்ற விந்துக் குற்றங்களால் அவதியுற்று குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிகள் மகபீஜ பைரவ மூர்த்திகளை செவ்வாய், வியாழக் கிழமைகளில் வழிபடுவதால் நற்சந்ததிகள் இறைப் பிரசாதமாக கிட்ட வாய்ப்புண்டு.

இரத்தச் சோகை, கர்பப்பை கோளாறுகள் போன்ற காரணங்களால் பாதிக்கப்பட்ட தம்பதிகள் ஆடபீஜ பைரவ மூர்த்திகளை வெள்ளிக் கிழமைகள் தோறும் வணங்கி வழிபடுவதால் நற்குணம் மிக்க குழந்தைகளைப் பெற இறைவன் அருள் புரிவார்.

வாகனம் ஏதுமின்றி அருள்புரியும் பைரவ மூர்த்திகளும் உண்டு. இவர்கள் சுதர்ம சக்கர பைரவ மூர்த்திகள் என்று அழைக்கப்படுகின்றனர். எவ்வளவோ படிப்பு, புத்திசாலித்தனம் போன்ற நல்ல தகுதிகளைப் பெற்றிலிருந்தாலும் தகுதிக்கு ஏற்ற வேலை வாய்ப்புகள் கிட்டாமல் குறைந்த சம்பளத்தில் வேலை பார்க்க வேண்டிய நிலையில் உள்ளோர் இத்தகைய பைரவ மூர்த்திகளை வணங்கி வழிபடுவதால் படிப்பு, அறிவுத் தகுதிகளுக்கு ஏற்ற நல்ல வேலைகள் அமையும்.

இது சிறு குறிப்பு மட்டுமே.

அழைக்கின்றோம் தூத்துக்குடியம்பதி

ஸ்ரீம்மகேஷ்சுவாமி_ஜீ யின் அன்னை ஆதிபராசக்தி சொர்ண ஆகர்சன மகா கால பைரவர் அஷ்வருட மகா வாராஹி அம்மன் மகா சித்தர் தவ பீடம்

5/122,விஸ்வபுரம். மெயின்ரோடு.
தூத்துக்குடி – 628002.
தொடர்புக்கு ; 9894336164.

மேலு‌ம் நமது தூத்துக்குடி விஸ்வபுரம் #ஸ்ரீம்மகேஷ்சுவாமி_ஜீ மகா சித்தர் தவ பீடத்தில் மகா கால பைரவர், சொர்ணாகர்ஷன பைரவர் என்று இரு பெரும் பைரவர்கள் அரசாட்சி செய்கிறார்கள் இந்த இரு பெரும் பைரவ திருமேனிகளுக்கும் புதிதாக ஐம்பொன்னால் ஆன உற்சவ மூர்த்திகள் செய்ய வேண்டி உள்ளது
அதற்காக பக்தர்கள் தங்களால் முடிந்தால் முடிந்த உதவிகள் செய்து இந்த பைரவ திருமேனிகள் செய்ய உதவலாம் இதன் மூலமாகவும் உங்கள் தோஷங்கள் அனைத்தும் நிவர்த்தியாகும் இந்த பைரவர்கள் அருளால் உங்களுக்கும் உங்களுக்கு பின்னால் வரும் தலைமுறையினர்க்கும் இந்த பைரவர் இருக்கும் காலம் வரை புண்ணியம் கிடைக்கும்.

மேலும் இந்த பைரவர் திருமேனிகளுக்கு உதவி செய்வதன் மூலம் நமது குடும்பத்தில் உள்ள அனைத்து விதமான பிரச்சனகளும் குடும்பஒற்றுமை, கல்வி, வேலைவாய்ப்பு, கல்யாணம், குழந்தையின்மை, மாந்திரிக சூழ்ச்சியால் பாதிக்கப்பட்டவர்கள், கண்திருஷ்டியால்பாதிக்கபட்டவர்கள்.பூா்வ ஜென்ம கர்மாவால் பாதிக்கப்பட்டவர்கள் பிதூர்தோசம், பிதூர்சாபம்உள்ளவர்கள், காலசர்ப்ப தோசம்,நவக்கிரக தோஷம், பிரம்மஹத்தி தோஷம் போன்ற அனை‌த்து விதமான எல்லா தோஷங்களும் நிவர்த்தி ஆகும். நமக்கு தான் குறிப்பிட்ட வயதில் மரணம் உண்டு இந்த உற்சவ திருமேனிகள் 1000 வருடங்கள் கடந்தாலும் அப்படியே தான் இருக்கும் இந்த திருமேனிகளுக்கு உதவுவதன் மூலம் இந்த திருமேனிகள் இருக்கும் காலம் வரை நமக்கும் நமக்குப்பின் வரும் நம் சந்ததியினருக்கும் எந்த பாதிப்பும் வராமல் இந்த தெய்வத்தின் அருள் நம்மை பரிபூரணமாக காத்து நிற்க்கும் மிகப்பெரிய புண்ணியம் கிடைக்கும்.

நமது பீடத்திற்காக இப்பொழுது உன்மத்த மகா கால பைரவர்,& சொர்ண ஆகர்சன பைரவர் செய்ய முடிவு செய்து உன்மத்த மகா கால பைரவர் தனது திருமேனியில் 12ராசிகளைய் குறிக்கும் வகையில் 12 நாகங்களைய் ஆபரணமாகவும் திருவாட்சியில் ஒவ்வொரு பக்கமும் 9 கிரகங்களைய் தாங்கி நிற்பது போல 9 நாக சர்ப்ப அமைப்புகள் காலசர்ப்ப தோஷத்தில் ராகு கேது பிடிக்குள் அனைத்து கிரகங்கள் இருப்பது போல் நமது பீட பைரவர் நாகங்களுக்கு மத்தியில் காலசர்ப்பதோஷ நிவாரணியாகவும் மேலும் குதிரை, நாய் வாகனத்துடனும் பித்ரு, சர்ப்ப தோஷத்துக்கு நிவாரணியாக அமைய உள்ளார். அனைத்து நட்சத்திர ராசியினரும் வழிபட்டு பயனடையும் வகையில் அமைய உள்ளது.

ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் செல்வத்திற்க்கு அதிபதியாகவும் வாழ்வில் வெற்றிக்காக போராடி கொண்டிருப்பவர்கள் மேலும் தனது துறையில் 99/- விழுக்காடு வந்து தோல்வி அடைபவர்கள் இந்த பைரவரை சரணடைந்தால் வெற்றி பெரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது மேலும் அவரது திருவாட்சியில் அனைத்து தடைகளையும் எரிக்கும் விதமாக தீச் சூவாலய் அமைப்புடன் அமைய உள்ளது .இவரைய் சரணடைய எங்கும் எதிலும் வெற்றி தான்.

இந்த இரு பெரும் பைரவர் ஐம்பொன் சிலை செய்வதற்க்கு மோல்டிங்டைய் எல்லாம் ரெடியாகி விட்டது மெட்டல் வாங்க பணம் இல்லாத காரணத்தால் வேலைகள் தடைப்பட்டுள்ளது

இந்த அருமையான புண்ணிய காரியத்தில் தங்களால் முடிந்தால் முடிந்த உதவிகளை செய்து பைரவர் ஐம்பொன் சிலை செய்ய உதவுவதன் மூலம் நமக்கும் நமக்கு பின் வரும் தலைமுறையினருக்கும் புண்ணியத்தைய் சேர்த்து வாழ்வாங்கு வாழ செய்யுங்கள் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

இந்த புண்ணிய காரியத்தில் பங்கேற்க தங்களால் முடிந்தால் முடிந்த உதவியை இந்த வங்கி கணக்கில் செலுத்தலாம்.

Maheshkumar
Acc.. 20469779163
Ifsc.. SBIN0017124
MICR.. 627002045
Swiftcode.. SBININBB
STATE BANK OF INDIA
TUTICORIN BRANCH
Google pay.. +91 98943 36164
Phone pay.. +91 98943 36164

ஓம் ஸ்ரீசொர்ணபைரவா போற்றி
ஸ்ரீ காலபைரவர் திருவடிகளே போற்றி.

வாழ்க_வளமுடன்
ஸ்ரீம்மகேஷ்சுவாமி_ஜீ
ஓம்சிவசிவஓம்
திருச்சிற்றம்பலம்.

பைரவரை வணங்கினாலே எல்லாவித நன்மைகள் கிடைக்கும் என்றால் நமது பீடத்திற்காக இரு பெரும் பைரவ திருமேனிகளுக்கு ஐம்பொன்னால் ஆன உற்சவ மூர்த்தி செய்கிறோம் அதற்க்கு உதவினால்
உங்க வாழ்க்கையில் சனிஸ்வர கிரகத்தினால் எந்த விதமான பாதிப்பும் எப்பொழுதும் வரவே வராது மேலும் உஙகள் வாழ்வில் உள்ள அனைத்துவிதமான தோஷங்கள், பாவங்கள் எல்லாம் நீங்கி சந்தோசமான இனிமையான வாழ்க்கை கிடைக்கும்.

பிறகென்ன… வெற்றி வெற்றி எங்கும் வெற்றி எதிலும் வெற்றிதான்.

Post CommentLeave a reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen − 11 =