தல வரலாறு
By Biravar in News on May 8, 2021
தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடி பெருநகரம் விஸ்வபுரம் ஸ்ரீம்.மகேஷ் சுவாமிஜீயின் அன்னை ஆதிபராசக்தி சொர்ண ஆகர்சன மகா கால பைரவர் அஷ்வாரூட மஹா வாராஹி அம்மன் மகா சித்தர் தவ பீடம் என்பது அங்கு அமர்ந்து அருளாட்சி செய்யும் ஆதிபராசக்தி அம்மன் மகேஷ் சுவாமிஜீ கனவில் அடிக்கடி வந்து எனக்கு உன் சொந்த வீடானது நான் முதன்முதலில் குடியிருந்த இடம் அங்கு என்கொரு அலயம் வேண்டும்மென்று அடிக்கடி என்னை தூங்க விடாத அளவில் கேட்டுக் கொண்டே இருந்தால் நான் வீட்டில் சொன்னேன் யாருமே அதற்க்கு ஒத்துழைக்கவில்லை அந்த வீடு 2010ல் தான் எல்லாம் தரைமட்டமாக இடித்து புதிதாக வாடகைக்கு விடும் படி வடிவமைத்து கட்டப்பட்டது அந்த வீட்டிலிருந்து மாதம் Rs.24000/- இருபத்திநான்காயிரம் ரூபாய் வருமானம் வந்து கொண்டிருந்தது அந்த இடத்துல தான் இந்த அம்மா ஆலயம் கேட்க்க எனக்கு என்ன செய்ய என்று குழம்பிய நின்றேன் பிறகு கல்யாணம்மாகி பல வருடங்களாக குழந்தை இல்லாத நபருக்காக குழந்தை கொடு நான் சொந்தமாகவே உனக்கு ஆலயம் கட்டுகிறன் என்றேன் நீ வேலைக்கு இந்த நாளில் நாள் செய் நான் குழந்தை தருகிறேன் என்றால் நானும் ஒவ்வொரு கொத்தனாரா கூப்பிட்டுக் கேட்டேன் ஒவ்வொருத்தரும் வெவ்வேரு ஐடியா சொன்னார்கள் அனால் கையில் ஒன்றும் இல்லை இங்கு ஒரு பிள்ளையார் ஆதிபராக்தி சொர்ண ஆகர்சன பைரவர் வைப்பது என தீர்மானித்தோம் கட்டிட வேலைக்காக மட்டும் கடைசியாக ஒருவர் 3லட்சம் கொடுங்க நான் செய்கிறேன் என வந்து பேசி 5000/- அட்வான்ஸ் வாங்கி சென்றார் ஆனால் அவரால் வரவே முடியவில்லை பிறகு இன்னொரு கோயிலில் ஒரே பிரச்சனை என வந்தார்கள் அங்கே அந்த முத்தாரம்மன் கோயில் பிரச்சினையைய் சரி செய்தேன் அந்த கோயில் நிர்வாகி நான் வந்து வேலை செய்கிறேன் என வந்து வேலைய தொடங்கினார் வேலைகள் நான் அங்கே இருந்தால் தான் நடக்கும் எக்கச்சக்க பிரச்சினை ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு சாமியும் காளி முருகர் என எனக்கும் இங்கே இடம் வேண்டும் என்றனர் சரி என்று மைலாடியில் விநாயகர் லெட்சுமிகணபதியாகவும் முருகர் தண்டாயுதபாணியாவும் காட்சி அளித்தார்கள் அதேமாதிரியும் ஆதிபராசக்தி, மகாமேரு சொர்ண ஆகர்சன பைரவர் ஆகிய சிலைகள் ஆடர் கொடுத்து செய்ய சொல்லி அங்கே அந்த வேலையும் நிறைவுற்றது ஆனால் கட்டிட வேலை மட்டும் முடிந்தபாடில்லை 3லட்சத்துக்கு தொடங்கிய வேலை 12லட்சமாகியும் முடியவில்லை இதற்க்காக யாரிடமும் யாசிக்கவில்லை கடன் பட்டும் வேலைகள் முடியவில்லை பிற்கு தான் ஒரு 5000 நோட்டிஸ் அடித்தோம் அதுவும் எந்த உபகாரமும் இல்லை.
அதன் பிறகு கொஞ்ச நாள் வேலை ஏதும் செய்யவில்லை கையிலும் ஒன்றும் இல்லை இந்த கால கட்டத்தில் மைலாடியில் செய்த முருகன் சிலை உடைந்து விட்டது பிறகு முருகன் சிலை செய்ய வேண்டுமென செங்கோட்டையில் ஆர்டர் கொடுத்தேன் அங்கு அவங்க வேலை மிக சிறப்பாக இருக்க கஜலட்சுமி 2 கன்னி மூலையில் விநாயகர் வருவேன் என்றார் கன்னி விநாயகர் ஒன்றும் செய்தோம் இத்துடன் முடித்து கும்பாபிஷேகம் போய் விடலாம் என இருந்தோம் கையில பணம் ஒன்றும் இல்லாமல் வேலை ஒன்றும் செய்ய முடியவில்லை. அதற்க்குள் நம் தாய் வாராஹி குதிரை மேல் காட்சி கொடுத்து இந்த கோலத்தில் நானும் இங்கே அஷ்வாரூட மகா வாராஹியாக இங்கே அமர வேண்டும் என கட்டளையிட்டால் நான் அம்மா தாயே உன்னை வைத்து என்னால் பராமரிக்க முடியாது என்று நான் அமைதியாக இருக்க சினைபன்றி வடிவில் கோயிலுக்குள் வந்து படுத்து கொண்டு குட்டிய போட்டு அந்த இடத்துல இருந்து பன்றியைய் விரட்டியடிக்க படாத பாடு பட்டேம் அதன் பிறகு தான் நான் வாராஹி அம்மனைய் ஆலயத்தில் வைக்க சம்மதித்தேன்.
ஆதாடு என் அப்பன் மகா கால பைரவர் காலசக்கரத்துடன் வாகனத்தோடு காட்சி கொடுத்தார் அத்துடன் சபரிமலை சாஸ்தா ஐயப்பனும் நானும் இந்த இடத்தில் அமர்வேன் என்றும் கேட்டதற்காக செங்கோட்டை ஸ்தபதியிடம் நான் கண்ட காட்சியைய் சொல்லி அதே போல அவர் மகா கால பைரவர் அஷ்வாரூட மகா வாராஹி சபரிமலை சாஸ்தா ஐயப்பன் ஆகிய சுவாமி சிலைகளைய் செய்து கொடுத்தார் அட்வான்ஸ் கொடுக்காமலே வேலைய் செய்தார் வேலை முடித்த பிறகு தான் பணம் கொடுத்து சிலைகளைய் எடுத்து வந்தேன் ஒரு மாதிரியா வேலை எல்லாம் முடித்து கும்பாபிஷேக நாள் குறித்து பத்திரிக்கை எல்லாம் அடித்து கும்பாபிஷேகத்திற்க்கு தான் என் முகநூல் அன்பர்கள் உதவிகள் கொஞ்சம் கிடைத்தது மொத்தத்தில் அந்த கோயில் கட்டி கும்பாபிஷேகம் செய்வதற்குள் கிட்டத்தட்ட 22 லட்ச ரூபாய் கடனாகித்தான் இந்த ஆலய வேலைகளைய் பூர்த்தி செய்தேன்.