Blog Subtitle Blog Title

அஷ்வாரூட மகா வராஹி வளர்பிறை பஞ்சமி பூஜை

By Biravar in Events on May 14, 2021

SrimMahesh Samyji #om_siva_siva_om

நமது தூத்துக்குடி விஸ்வபுரம் #ஸ்ரீம்மகேஷ்சுவாமி_ஜீயின் அன்னை ஆதிபராசக்தி சொர்ணாகர்ஷன மகா கால பைரவர் அஷ்வாரூட மகா வராஹி அம்மன் மகா சித்தர் தவ பீடத்தில்
16 – 05 – 2021 ஞாயிற்றுக்கிழமை பஞ்சமி திதி புனர்பூச நட்சத்திரத்தில் அன்று நண்பகல் 01 – 00 மணிக்கு மேல் அஷ்வாரூட மகா வராஹி அம்மனுக்கு வளர்பிறை பஞ்சமி பூஜை மிக சிறப்பாக நடைபெறவுள்ளது.

https://www.youtube.com/watch?v=nnisak9YmXQ

உலகில் கொரோனா 2ம் அலை வேகமாக பரவி வருகின்றது இதில் இருந்து உலக மக்களைய் காக்கும் பொருட்டும் உலக மக்கள் அனைவரும் கொரோனா என்ற ஆட்கொல்லி நச்சு கிருமியிடம் இருந்து விடுபட்டு உலக மக்கள் நிம்மதியாகவும், சந்தோஷமாகவும் வாழும் பொருட்டு நம் தாய் வாராஹி அம்மனுக்கு அன்று விசேஷ பூஜைகள் நடைபெற இருக்கின்றது.

இது கொரோனா காலம் இந்த பூஜை மிக சிறப்பாக நடைபெற பக்தர்கள் தங்களால் முடிந்தால் முடிந்த உதவிகளைய் செய்து அஷ்வாரூட மகா வராஹி அம்மன் அருளைய் பெற்று பெரு வாழ்வு வாழ வேண்டுமென வாழ்த்தி வேண்டிக் கொள்கிறேன்.

நம் வாழ்வில் அனைத்துக்கும் ஆதியே வாராகி தான்..

அஷ்டவாராகி_வழிபாடு

ஶ்ரீ வாராஹி தேவியின் உபாசனை என்றால் ஏதோ மின் அணு உலையில் பார்க்கும் பணியை போல மக்கள் அஞ்சுவர். அத்தகைய உக்ரமும் கருணையும் உருவான தேவ உடலும் மிருக பலமும் கொண்ட ஶ்ரீ வாராஹி அமைதியுடனும் பயபக்தியுடனும் தூய்மையாக வழிபடும் பக்தர்கள் மனத்தில் “அஹமித்யேவ பவாநீம் ” என்பதற்கு ஏற்ப வஜ்ர வாராகியாக மனத்தின் உள்ளே அரூபமாக உறையும் பெருந்தேவதை..

மனிதகுலத்தின் இன்னல்களுக்கு காரணமாக விளங்குகிற மூன்று கிரகங்கள் ராகு கேது சனி ஆவர்.. மகிஷம் கருமையான சனியின் அம்சம்.. எதுவெல்லாம் பூமியை கீருமோ , பிளக்குமோ அதுவெல்லாம் கேதுவின் அம்சம்… கலப்பை மண்ணை பிளக்கும் கேது ஆவான் ..

பொருட்களை இடித்து தூளாக்கும் அனைத்தும் ராகுவின் அம்சம்.. உலக்கையே ராகு ஆவான்..

ராகுவையும் , கேதுவையும் ஆட்டிவைத்து சனியை வாகனமாக்கி அதிலேறி வரதமும் அபயமும் தந்து பக்தர்களின் துயரத்தை தீர்ப்பவளே இந்த வாராகி எனும் தெய்வம் ..

வஜ்ர தந்த பற்களால் பகைஞர்தம் உடலை பிளந்து குருதி குடித்து ரத்த திலகமிட்டு குடல்மாலை பூண்டு மது மாமிசம் புசிக்கும் அகோரி திகம்பரி சிம்மாரூடாவும் இவளே..

இவளது உக்ர பிரளய வடிவத்தையோ , இவளுடைய மாமிச நைவேத்ய பொருட்களையோ நிந்தனை செய்தவர் , இவளை பற்றிய பேச்சுகளை எதிர்த்து நின்று சரியாக வாதாடும் பாவிகள் அனைவரும் சூலத்திற்கு இரையாவதில் ஐயமில்லை ..

எனவே வாராஹியிடம் இக்குணம் படைத்தோர் சற்று ஒதுங்கி இருங்கள் ..

சாக்த மார்க்கத்தில் இவள் போல ஒரு காருண்யமும் இல்லை .. பிரளயமும் இல்லை ..

நினைத்து பார்த்த மாத்திரத்தில் கண்முன்னே சட்டென்று காட்சி தருபவள் #அஸ்வாரூடா வாராகி.. இவளோ வெண்குதிரை மீது யௌவனவதியாக பேரழகுடன் காற்றாக பறப்பவள்… மும்மடிப்புடைய இடையுடன் சர்வ நவரத்தினங்கள் ஆபரணங்கள் தரித்து வரும் அநாதரட்சகி .. இவளை நள்ளிரவு ஆராதனை செய்யும் பக்தர்கள் காதில் பன்றி உருமலுடன் தான் நேரில் பிரத்யட்சமாக வந்திருப்பதை தெரிவிப்பாள் ..

மேலும் நமது பீடத்தில் இந்த வருடமும் ஆனி மாதம் அம்மாவாசையில் இருந்து பத்து நாட்கள் அஷடா நவராத்திரி உற்சவம் நடைபெற இருக்கின்றது. 09.07.2021ல் வெள்ளிக்கிழமை அம்மாவசை அன்று தீர்த்தவாரி மற்றும் மாகாப்பு அலங்காரத்துடன் தொடங்கி 19.07.2021 வரை பத்து நாட்கள் தினமும் ஹோமம், அபிஷேகம் ஆலங்காரம் விஷேச பைடயலுடன் சிறப்பு பூஜைகள் நடைபெறும். கடைசி நாள் அன்று திருக்கல்யாண வைபவத்துடன் மக்களுக்கு சிறப்பு கல்யாண சாப்பாட்டுடன் உற்சவம் நிறைவுறும்.

இந்த உற்சவ நிகழ்வுக்கும் கட்டளைதாரர்கள் வரவேற்க படுகின்றனர் இதற்கும் பக்தர்கள் தங்களால் முடிந்தால் முடிந்த உதவிகள் செய்யலாம்.

அழைக்கின்றோம் தூத்துக்குடியம்பதி

ஸ்ரீம்மகேஷ்சுவாமி_ஜீ யின் அன்னை ஆதிபராசக்தி சொர்ண ஆகர்சன மகா கால பைரவர் அஷ்வருட மகா வாராஹி அம்மன் மகா சித்தர் தவ பீடம்

5/122,விஸ்வபுரம். மெயின்ரோடு.
தூத்துக்குடி – 628002.
தொடர்புக்கு ; 9894336164.

இந்த புண்ணிய காரியத்தில் பங்கேற்க தங்களால் முடிந்தால் முடிந்த உதவியை இந்த வங்கி கணக்கில் செலுத்தலாம்.

Maheshkumar
Acc.. 20469779163
Ifsc.. SBIN0017124
MICR.. 627002045
Swiftcode.. SBININBB
STATE BANK OF INDIA
TUTICORIN BRANCH
Google pay.. +91 98943 36164
Phone pay.. +91 98943 36164

ஸ்ரீம் அன்னை ஆதி பைரவர் வராஹி அறக்கட்டளை

மகா சித்தர் தவ பீடத்தை வலைத்தளம் மூலமாக தொடர்புகொள்ளலாம் .

ஸ்ரீம்மகேஷ்சுவாமி_ஜீ

ஓம்சிவசிவஓம்

திருச்சிற்றம்பலம்.

Post CommentLeave a reply

Your email address will not be published. Required fields are marked *

19 + 15 =