Blog Subtitle Blog Title

மகா வராஹி அம்மனுக்கு வளர்பிறை பஞ்சமி பூஜை

By Biravar in Events on June 12, 2021

அன்னை ஆதிபராசக்தி சொர்ணாகர்ஷன மகா கால பைரவர் அஷ்வாரூட மகா வராஹி அம்மன் மகா சித்தர் தவ பீடத்தில்
15 – 06 – 2021 செவ்வாய்க்கிழமை பஞ்சமி திதி ஆயில்ய நட்சத்திரத்தில் அன்று நண்பகல் 12 – 00 மணிக்கு மேல் அஷ்வாரூட மகா வராஹி அம்மனுக்கு வளர்பிறை பஞ்சமி பூஜை மிக சிறப்பாக நடைபெறவுள்ளது.

உலகில் கொரோனா 2ம் அலை வேகமாக பரவி வருகின்றது இதில் இருந்து உலக மக்களைய் காக்கும் பொருட்டும் உலக மக்கள் அனைவரும் கொரோனா என்ற ஆட்கொல்லி நச்சு கிருமியிடம் இருந்து விடுபட்டு உலக மக்கள் நிம்மதியாகவும், சந்தோஷமாகவும் வாழும் பொருட்டு நம் தாய் வாராஹி அம்மனுக்கு அன்று விசேஷ பூஜைகள் நடைபெற இருக்கின்றது.

இது கொரோனா காலம் என்பதால் பக்தர்கள் அனுமதி இல்லை மேலும் இந்த பூஜை மிக சிறப்பாக நடைபெற பக்தர்கள் தங்களால் முடிந்தால் முடிந்த உதவிகளைய் செய்து அஷ்வாரூட மகா வராஹி அம்மன் அருளைய் பெற்று பெரு வாழ்வு வாழ வேண்டுமென வாழ்த்தி வேண்டிக் கொள்கிறேன்.

மேலும் அடுத்த மாதம் 09.07.2021 அம்மாவாசை அன்றில் இருந்து 10 நாட்கள் அஷடா நவராத்திரி இந்த நவராத்திரி வாராஹி அம்மனுக்கான நவராத்திரி இந்த உற்சவத்தின் நிறைவு நாளில் வாராஹிக்கும் உன்மத்த பைரவருக்கும் திருக்கல்யாணம் நடைபெறும் இந்த இடைப்பட்ட காலத்திற்க்குள் நாம் உன்மத்த மகா கால பைரவர் ஐம்பொன் சிலையை செய்து நமது பீடத்திற்கு கொண்டு வர வேண்டிய கால கட்டத்தில் உள்ளோம் இதற்காக பக்தர்கள் இந்த கஷ்ட காலத்திலும் தங்களால் முடிந்த உதவிகளைய் செய்து உன்மத்த மகா கால பைரவர் நமது பீடத்திற்க்கு வர உதவுங்கள் மேலும் குருவருளும், திருவருளும் பெற்று வாழ்வாங்கு வாழ வேண்டுமென வாழ்த்தி வேண்டிக் கொள்கிறேன்.

எல்லோருக்கும் எப்போதும் நல்லதே நடக்க நம் உன்மத்த மகா கால பைரவசுவாமி துணை நின்று திருவருள் புரிவார் !

நம் வாழ்வில் அனைத்துக்கும் ஆதியே வாராகி தான்..

சப்த கன்னிகளில் ஐந்தாவது தெய்வமாக வாராஹி வருகிறாள்.

பக்திக்கு படிப்பு அவசியமன்று என்பதற்கிணங்க வாராஹி அம்மனின் மந்திரங்களோ, தமிழ்ப் பாடல்களோ நமக்கு தெரியாவிட்டாலும் நம் பக்தி வாராஹி‌ அன்னையின் மீது உண்மையாக இருக்கும் பட்சத்திலும் , நாம் நற்குணம் கொண்டவராகிலும் நம் கனவில் வாராஹி அம்மன் காட்சி தோன்றி நமக்கு அடைக்கலம் கொடுப்பதை உறுதி செய்கிறாள். இவள் சொப்பனத்தில் வந்து காட்சி அளிப்பதால் இத்தாயாருக்கு “சொப்பன வாராகி” என்றும் பெயருண்டு.

காட்டுப்பன்றியின் முகம் கொண்ட பெருமாளின் அவதாரம் வராக அவதாரம். இந்த வராகமூர்த்தி உடலிலிருந்து தோன்றிய காட்டுப்பன்றியின் முகம் கொண்டவள் வாராஹி. காட்டுப்பன்றி எப்படி நிலத்தை ஆழக்குடையும் தன்மை உடையதோ அதே போல் வாராஹியை வழிபடுவோரது மனதில் பல வருடங்களாக சேர்ந்துள்ள நல்லவைகளையும் தீயவைகளையும் ஆழக்குடைந்து அறிந்து கொள்பவள் வாராஹி. வாராஹி நம் மனதை முழுதாக அறிந்த பின்னரே நம்மை பக்தராக ஏற்றுக் கொள்கிறாள் என்பது அனுபவ உண்மை.

     அவள் வாயில் உள்ள இரண்டு கொம்புகள் மற்றும் கலப்பை ஆயுதம் ஆகியன ஆழக்குடைந்து நம் மனதை அறிதல், ஆழக்குடைந்து நம் பிரச்சனையை வேரறுத்தல் மற்றும் ஆழ உழுது விவாசாயம் செய்தல் ஆகிய தொழிகளுக்கு அடையாளமாய் காட்சி அளிக்கிறது.

    நமக்கு இஷ்ட தெய்வம் யாரோ அவரிடம் கோரிக்கை வைத்து வாராஹி தாயின் அருள் கிடைக்க வேண்டும் என்று மனமுருகி பக்தியில் திளைத்து இருக்கும் காலகட்டங்களில் வாராஹி அம்மன் கனவில் தோன்றுவது சாத்தியப்படுகிறது. 

      ஜாதக ரீதியாக ஆறுக்குடைய தசை நடக்கும் காலங்களில் நோய், எதிரி, கடன் ஆகியவற்றையும் 8 க்குரிய தசை நடக்கும் காலங்களில் கண்டங்கள், அசிங்கங்கள், அவமானங்களும் 12 க்குரிய தசை நடக்கும் காலங்களில் இழப்பு, விரையம், நஷ்டம் போன்ற பாதிப்புகள் ஏற்படுகிறது. இவற்றிலிருந்து விடுபட வாராஹி அருள் இன்றியமையாதது.

      தாயாரினை பற்றி நாம் அறிந்து கொள்ள அவர் குறித்த தமிழ் இலக்கியங்களை படிப்பது அவசியம். "வராகி மாலை" என்னும் நூல் வீரை கவிராச பண்டிதர் என்பவரால் 16-ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்டுள்ளது.  

     வாராஹி மாலை"

1.இருகுழை கோமளம் தாள் புஷ்பராகம் இரண்டுகண்ணும்
குருமணி நீலம் கை கோமேதகம் நகம் கூர்வயிரம்
திருநகை முத்துக் கனிவாய் பவளம் சிறந்தவல்லி
மரகத நாமம் திருமேனியும் பச்சை மாணிக்கமே

இரு குழை கோமளம் – இரண்டு காதுகளிலும் உள்ள குண்டலம் மாணிக்கம்; Ruby எனப்படும் பளபளப்பான சிவப்பு நிற மாணிக்கம்: சூரியன் கிரகத்திற்குரிய நவரத்தினம் இது.

தாள் புஷ்பராகம் – இரண்டு காலும் புஷ்பராக நவரத்தினத்தை போன்ற
பளபளப்பான மஞ்சள் நிறமுடையது. Yellow sapphire எனும் மஞ்சள்நிற புஷ்பராகம்: குரு (வியாழன்) பகவானுக்குரிய ரத்தினம்.

இரண்டு கண்ணும் குருமணி நீலம் – இரண்டு கண்ணும் ஒளியுடைய மணியாகிய நீலம். Blue sapphire எனப்படும் நீலக்கல்: சனி பகவானுக்குரிய ரத்தினம்.

கை கோமேதகம் – கை கருஞ்சிவப்பு கோமேதகமாய் ஒளிரும். Garnet எனப்படும் இருண்ட சிவப்பு நிற கோமேதகம்: இராகு கிரகத்திற்குரிய ரத்தினம்.

நகம் கூர் வைரம் – நகம் வைரத்தை போல் பளபளப்புடனும், எதிரிகளின் உடலை கிழிக்கும் விதத்தையும் சுட்டுகிறது. Diamond எனப்படும் வைரம்: சுக்கிரனிற்குரிய ரத்தினம்.

திருநகை முத்து – நகைக்கும் போது அவள் பற்கள் முத்தை ஒத்தனவாக விளங்குகிறது. Pearl எனப்படும் வெண்ணிற முத்து: சந்திரனிற்குரிய ரத்தினம்.

கனிவாய் பவளம் : வராகத்தின் வாயை உடைய இவளின் வாய் எதிரிகளின் இரத்தத்தை குடிக்கும் குணம் கொண்டதால் பவளத்தை போல் மின்னுகின்றது. Coral எனப்படும் இரத்தச்சிவப்பு நிற பவளம்: செவ்வாய் கிரகத்தின் ரத்தினம்.

சிறந்த வல்லி மரகதம் நாமம் – பச்சை நிறமுடைய சிறந்த மரகத ரத்தினத்தை போல் ஒளிரும் அம்பாள் என்பதால் மரகதவல்லி என்றும் பெயர் பெறுவாள். Emerald எனப்படும் பச்சைநிற மரகதம்: புதன் கிரகத்தின் ரத்தினம்.

திருமேனி பச்சையும் மாணிக்கமே – இவளது முழுத் திருமேனி பச்சையும் மாணிக்க சிவப்பும் கலந்திருக்கும்.

” வாராஹி மாலை ” என்ற இந்நூல் கட்டளை கலித்துறையாக அமைக்கப்பட்டுள்ளது . ஒவ்வொரு அடியும் ஒற்று நீக்கி 16 எழுத்துகள் இருக்குமாறும், நிரையசை கொண்டு தொடங்கினால் ஒற்று நீக்கி 17 எழுத்துகள் இருக்குமாறும் பாடுவர். இதன்படி நான்கடிகள் உடைய ஒரு கலித்துறைச் செய்யுள் நேரசையில் தொடங்கினால் ஒரு செய்யுளில் மொத்தம் 64 எழுத்துகளும், நிரையசையில் தொடங்கினால் அச்செய்யுளில் மொத்தம் 68 எழுத்துகளும் இருக்கும்.

அடுத்த பதிவில் இன்னும் சில பாடல்களை ” வாராஹி மாலை” யிலிருந்து பார்க்கலாம்

சாக்த மார்க்கத்தில் இவள் போல ஒரு காருண்யமும் இல்லை .. பிரளயமும் இல்லை ..

நினைத்து பார்த்த மாத்திரத்தில் கண்முன்னே சட்டென்று காட்சி தருபவள் #அஸ்வாரூடா வாராகி.. இவளோ வெண்குதிரை மீது யௌவனவதியாக பேரழகுடன் காற்றாக பறப்பவள்… மும்மடிப்புடைய இடையுடன் சர்வ நவரத்தினங்கள் ஆபரணங்கள் தரித்து வரும் அநாதரட்சகி .. இவளை நள்ளிரவு ஆராதனை செய்யும் பக்தர்கள் காதில் பன்றி உருமலுடன் தான் நேரில் பிரத்யட்சமாக வந்திருப்பதை தெரிவிப்பாள் ..

மேலும் நமது பீடத்தில் இந்த வருடமும் ஆனி மாதம் அம்மாவாசையில் இருந்து பத்து நாட்கள் அஷடா நவராத்திரி உற்சவம் நடைபெற இருக்கின்றது. 09.07.2021ல் வெள்ளிக்கிழமை அம்மாவசை அன்று தீர்த்தவாரி மற்றும் மாகாப்பு அலங்காரத்துடன் தொடங்கி 19.07.2021 வரை பத்து நாட்கள் தினமும் ஹோமம், அபிஷேகம் ஆலங்காரம் விஷேச பைடயலுடன் சிறப்பு பூஜைகள் நடைபெறும். கடைசி நாள் அன்று திருக்கல்யாண வைபவத்துடன் மக்களுக்கு சிறப்பு கல்யாண சாப்பாட்டுடன் உற்சவம் நிறைவுறும்.

இந்த உற்சவ நிகழ்வுக்கும் கட்டளைதாரர்கள் வரவேற்க படுகின்றனர் இதற்கும் பக்தர்கள் தங்களால் முடிந்தால் முடிந்த உதவிகள் செய்யலாம்.

அழைக்கின்றோம் தூத்துக்குடியம்பதி

ஸ்ரீம்மகேஷ்சுவாமி_ஜீ யின் அன்னை ஆதிபராசக்தி சொர்ண ஆகர்சன மகா கால பைரவர் அஷ்வருட மகா வாராஹி அம்மன் மகா சித்தர் தவ பீடம்

5/122,விஸ்வபுரம். மெயின்ரோடு.
தூத்துக்குடி – 628002.
தொடர்புக்கு ; 9894336164.

இந்த புண்ணிய காரியத்தில் பங்கேற்க தங்களால் முடிந்தால் முடிந்த உதவியை இந்த வங்கி கணக்கில் செலுத்தலாம்.

Maheshkumar
Acc.. 20469779163
Ifsc.. SBIN0017124
MICR.. 627002045
Swiftcode.. SBININBB
STATE BANK OF INDIA
TUTICORIN BRANCH
Google pay.. +91 98943 36164
Phone pay.. +91 98943 36164

ஸ்ரீம் அன்னை ஆதி பைரவர் வராஹி அறக்கட்டளை

Post CommentLeave a reply

Your email address will not be published. Required fields are marked *

eight + one =