Category: Events

மகா சித்தர் தவ பீடத்தில் விநாயகர் சதுர்த்தி பூஜை

By Biravar in Events on September 6, 2021

நமது தூத்துக்குடி விஸ்வபுரம் #ஸ்ரீம்மகேஷ்சுவாமி_ஜீ மகா சித்தர் தவ பீடத்தில் கன்னிமூல கணபதி, மற்றும் லெட்சுமி கணபதிக்கு பிறந்த நாளான விநாயகர் சதுர்த்தி பூஜை 10.09.2021 வெள்ளிக் கிழமையன்று அதிகாலை 05:00 மணிக்கு மேல் கணபதி ஹோமத்துடன் தொடங்கி அபிஷேகம், அலங்காரம் மற்றும் விஷேச பூஜைகளுடன் விநாயகர் சதுர்த்தி பூஜைகள் மிக சிறப்பாக நடைபெறும்.

மேலும் நமது பீடத்தில் உள்ள அஷ்வாரூட மஹா வாராஹி அம்மனுக்கு இந்த மாத வளர்பிறை பஞ்சமி பூஜை வருகின்ற 11.09.2021 சனிக்கிழமை சுவாதி நட்சத்திரத்தில் அன்று காலை 10:00 மணிக்கு மேல பூஜை மிக சிறப்பாக நடைபெறும் மேலும் 14.09.2021 செவ்வாய்கிழமை கேட்டை நட்சத்திரத்துடன் கூடிய தேய்பிறை அஷ்டமியில் நமது பீட சொர்ணாகர்ஷன மகா கால பைரவருக்கு அன்று காலை 09:00 மணிக்கு மேல வளர்பிறை அஷ்டமி பூஜை நடைபெற உள்ளதால் இந்த பூஜை மிக சிறப்பாக நடைபெற தங்களால் முடிந்த உதவியினை செய்யும் படி அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் நமது பீடத்தின் மூன்றாம் ஆண்டு வருஷாபிசேகம் 01.11.2021 திங்கட்கிழமை ஐப்பசி மாத உத்திரம் நட்சத்திரத்தில் மிக சிறப்பாக நடைபெறும் அன்று நமது பீட சொர்ண பைரவி அம்பிகா சமேத சொர்ண ஆகர்சன பைரவருக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெறும் இந்த இடைப்பட்ட கால கட்டத்திற்குள் சொர்ணாகர்ஷன பைரவர் ஐம்பொன் (விக்ரகம்) சிலையை செய்து கொண்டு வர வேண்டியது உள்ளதால் ஐம்பொன் சிலை செய்வதற்க்கு மாதிரி மெழுகு சிலை (மோல்டிங்டைய்) ரெடியாக உள்ளது மெட்டல் வாங்க பணம் இல்லாத காரணத்தினால் இந்த ஐம்பொன் சிலை வேலைகள் முடிய தாமதமாகிறது இதை படிக்கும் பைரவ அன்பர்கள் தங்களால் முடிந்தால் முடிந்த உதவிகளைய் செய்து இந்த பைரவ ஐம்பொன் திருமேனி நமது பீடத்திற்க்கு வர உதவி குருவருளும், திருவருளும் பெற்று வாழ்வாங்கு வாழ வேண்டிக் கொள்கிறோம்.

இந்த புண்ணிய காரியத்தில் பங்கேற்க தங்களால் முடிந்தால் முடிந்த உதவியை இந்த வங்கி கணக்கில் செலுத்தலாம்.

Maheshkumar
Acc.. 20469779163
Ifsc.. SBIN0017124
MICR.. 627002045
Swiftcode.. SBININBB
STATE BANK OF INDIA
TUTICORIN BRANCH
Google pay.. +91 98943 36164
Phone pay.. +91 98943 36164

https://youtube.com/channel/UCglDk4K1HdHCSFB6VCzbPJQ

இந்த YouTube சேனல் நமது பீடத்திற்காக உருவாக்கி உள்ளோம் இந்த சேனலில் தூத்துக்குடி நமது பீடத்தில் நடைபெறும் அனைத்து விசேஷ அபிஷேகம் மற்றும் அலங்கார வீடியோக்களும் இதில் பதிவேற்றம் செய்யப்படுகிறது.

நமது நட்பு வட்டாரத்தில் இருக்கும் அனைத்து உறுப்பினர்களும் இந்த சேனலை subscribe செய்து இந்த YouTube சேனல் பெரிய அளவில் வளர்ச்சி அடைய செய்து அருள்பெருங்கள்.

இந்த பதிவில் நமது பீடத்தில் நடைபெற்ற 2021 அஷடா நவராத்திரி திருக்கல்யாண வைபவ லிங்கை அனுப்பி உள்ளேன் அந்த லிங்க் வழியாக அன்னை ஸ்ரீமஹா வாராஹி அம்பிகா சமேத உன்மத்த பைரவர் திருக்கல்யாண நிகழ்ச்சியை கண்டு மகிழ வேண்டிக் கொள்கிறேன்.

வாழ்க_வளமுடன்

ஸ்ரீம்மகேஷ்சுவாமி_ஜீ

ஓம்சிவசிவஓம்

திருச்சிற்றம்பலம்.

வாழ்கபைரவர்அருளுடன்

வளர்கவாராஹிஅருளுடன்

ஆவணி மாத தேய்பிறை பஞ்சமி பூஜை

By Biravar in Events on September 1, 2021

நமது தூத்துக்குடி விஸ்வபுரம் #ஸ்ரீம்மகேஷ்சுவாமி_ஜீ மகா சித்தர் தவ பீடத்தில் அஷ்வாரூட மஹா வாராஹி அம்மனுக்கு இந்த ஆவணி மாத தேய்பிறை பஞ்சமி பூஜை 27.08.2021 வெள்ளிக் கிழமையன்று காலை 10:00 மணிக்கு மேல் மிக சிறப்பாக நடைபெற்றது.

மேலும் நேற்று 30.08.2021 திங்கட்கிழமை ரோகிணி நட்சத்திரத்துடன் கூடிய தேய்பிறை அஷ்டமியில் நமது பீட மகா கால பைரவருக்கு அன்று காலை 10:00 மணிக்கு மேல தேய்பிறை அஷ்டமி பூஜை நடைபெற்றது.

இந்த பூஜையில் நடைபெற்ற அபிஷேக அலங்கார மற்றும் தீபாரதனை காட்சிகள் கீழுள்ள லிங்க் வழியாக கண்டு மகிழலாம்.

YOUTUBE CHANNEL

இந்த YouTube சேனல் நமது பீடத்திற்காக உருவாக்கி உள்ளோம் இந்த சேனலில் தூத்துக்குடி நமது பீடத்தில் நடைபெறும் அனைத்து விசேஷ அபிஷேகம் மற்றும் அலங்கார வீடியோக்களும் இதில் பதிவேற்றம் செய்யப்படுகிறது.

நமது நட்பு வட்டாரத்தில் இருக்கும் அனைத்து உறுப்பினர்களும் இந்த சேனலை subscribe செய்து இந்த YouTube சேனல் பெரிய அளவில் வளர்ச்சி அடைய செய்து அருள்பெருங்கள்.

மேலும் நமது பீடத்தில் உள்ள அஷ்வாரூட மஹா வாராஹி அம்மனுக்கு நடைபெற்ற 27.08.2021 வெள்ளிக்கிழ‌மை ஆவணி மாத தேய்பிறை பஞ்சமி பூஜைகளைய் கண்டு மகிழலாம்.

https://youtu.be/mFKYLlHgbXU

https://youtu.be/01Lx_Nv0E3w

மேலும் நமது நமது பீடத்தில் உள்ள மகா கால பைரவருக்கு நடைபெற்ற 30.08.2021 திங்கட்கிழமை ஆவணி மாத தேய்பிறை அஷ்டமி பூஜைகளைய் கண்டு மகிழலாம்.

https://youtu.be/mD92pMs0JQU

ஸ்ரீம் அன்னை ஆதி பைரவர் வராஹி அறக்கட்டளை

மகா வராஹி அம்மனுக்கு வளர்பிறை பஞ்சமி பூஜை

By Biravar in Events on June 12, 2021

அன்னை ஆதிபராசக்தி சொர்ணாகர்ஷன மகா கால பைரவர் அஷ்வாரூட மகா வராஹி அம்மன் மகா சித்தர் தவ பீடத்தில்
15 – 06 – 2021 செவ்வாய்க்கிழமை பஞ்சமி திதி ஆயில்ய நட்சத்திரத்தில் அன்று நண்பகல் 12 – 00 மணிக்கு மேல் அஷ்வாரூட மகா வராஹி அம்மனுக்கு வளர்பிறை பஞ்சமி பூஜை மிக சிறப்பாக நடைபெறவுள்ளது.

உலகில் கொரோனா 2ம் அலை வேகமாக பரவி வருகின்றது இதில் இருந்து உலக மக்களைய் காக்கும் பொருட்டும் உலக மக்கள் அனைவரும் கொரோனா என்ற ஆட்கொல்லி நச்சு கிருமியிடம் இருந்து விடுபட்டு உலக மக்கள் நிம்மதியாகவும், சந்தோஷமாகவும் வாழும் பொருட்டு நம் தாய் வாராஹி அம்மனுக்கு அன்று விசேஷ பூஜைகள் நடைபெற இருக்கின்றது.

இது கொரோனா காலம் என்பதால் பக்தர்கள் அனுமதி இல்லை மேலும் இந்த பூஜை மிக சிறப்பாக நடைபெற பக்தர்கள் தங்களால் முடிந்தால் முடிந்த உதவிகளைய் செய்து அஷ்வாரூட மகா வராஹி அம்மன் அருளைய் பெற்று பெரு வாழ்வு வாழ வேண்டுமென வாழ்த்தி வேண்டிக் கொள்கிறேன்.

மேலும் அடுத்த மாதம் 09.07.2021 அம்மாவாசை அன்றில் இருந்து 10 நாட்கள் அஷடா நவராத்திரி இந்த நவராத்திரி வாராஹி அம்மனுக்கான நவராத்திரி இந்த உற்சவத்தின் நிறைவு நாளில் வாராஹிக்கும் உன்மத்த பைரவருக்கும் திருக்கல்யாணம் நடைபெறும் இந்த இடைப்பட்ட காலத்திற்க்குள் நாம் உன்மத்த மகா கால பைரவர் ஐம்பொன் சிலையை செய்து நமது பீடத்திற்கு கொண்டு வர வேண்டிய கால கட்டத்தில் உள்ளோம் இதற்காக பக்தர்கள் இந்த கஷ்ட காலத்திலும் தங்களால் முடிந்த உதவிகளைய் செய்து உன்மத்த மகா கால பைரவர் நமது பீடத்திற்க்கு வர உதவுங்கள் மேலும் குருவருளும், திருவருளும் பெற்று வாழ்வாங்கு வாழ வேண்டுமென வாழ்த்தி வேண்டிக் கொள்கிறேன்.

எல்லோருக்கும் எப்போதும் நல்லதே நடக்க நம் உன்மத்த மகா கால பைரவசுவாமி துணை நின்று திருவருள் புரிவார் !

நம் வாழ்வில் அனைத்துக்கும் ஆதியே வாராகி தான்..

சப்த கன்னிகளில் ஐந்தாவது தெய்வமாக வாராஹி வருகிறாள்.

பக்திக்கு படிப்பு அவசியமன்று என்பதற்கிணங்க வாராஹி அம்மனின் மந்திரங்களோ, தமிழ்ப் பாடல்களோ நமக்கு தெரியாவிட்டாலும் நம் பக்தி வாராஹி‌ அன்னையின் மீது உண்மையாக இருக்கும் பட்சத்திலும் , நாம் நற்குணம் கொண்டவராகிலும் நம் கனவில் வாராஹி அம்மன் காட்சி தோன்றி நமக்கு அடைக்கலம் கொடுப்பதை உறுதி செய்கிறாள். இவள் சொப்பனத்தில் வந்து காட்சி அளிப்பதால் இத்தாயாருக்கு “சொப்பன வாராகி” என்றும் பெயருண்டு.

காட்டுப்பன்றியின் முகம் கொண்ட பெருமாளின் அவதாரம் வராக அவதாரம். இந்த வராகமூர்த்தி உடலிலிருந்து தோன்றிய காட்டுப்பன்றியின் முகம் கொண்டவள் வாராஹி. காட்டுப்பன்றி எப்படி நிலத்தை ஆழக்குடையும் தன்மை உடையதோ அதே போல் வாராஹியை வழிபடுவோரது மனதில் பல வருடங்களாக சேர்ந்துள்ள நல்லவைகளையும் தீயவைகளையும் ஆழக்குடைந்து அறிந்து கொள்பவள் வாராஹி. வாராஹி நம் மனதை முழுதாக அறிந்த பின்னரே நம்மை பக்தராக ஏற்றுக் கொள்கிறாள் என்பது அனுபவ உண்மை.

     அவள் வாயில் உள்ள இரண்டு கொம்புகள் மற்றும் கலப்பை ஆயுதம் ஆகியன ஆழக்குடைந்து நம் மனதை அறிதல், ஆழக்குடைந்து நம் பிரச்சனையை வேரறுத்தல் மற்றும் ஆழ உழுது விவாசாயம் செய்தல் ஆகிய தொழிகளுக்கு அடையாளமாய் காட்சி அளிக்கிறது.

    நமக்கு இஷ்ட தெய்வம் யாரோ அவரிடம் கோரிக்கை வைத்து வாராஹி தாயின் அருள் கிடைக்க வேண்டும் என்று மனமுருகி பக்தியில் திளைத்து இருக்கும் காலகட்டங்களில் வாராஹி அம்மன் கனவில் தோன்றுவது சாத்தியப்படுகிறது. 

      ஜாதக ரீதியாக ஆறுக்குடைய தசை நடக்கும் காலங்களில் நோய், எதிரி, கடன் ஆகியவற்றையும் 8 க்குரிய தசை நடக்கும் காலங்களில் கண்டங்கள், அசிங்கங்கள், அவமானங்களும் 12 க்குரிய தசை நடக்கும் காலங்களில் இழப்பு, விரையம், நஷ்டம் போன்ற பாதிப்புகள் ஏற்படுகிறது. இவற்றிலிருந்து விடுபட வாராஹி அருள் இன்றியமையாதது.

      தாயாரினை பற்றி நாம் அறிந்து கொள்ள அவர் குறித்த தமிழ் இலக்கியங்களை படிப்பது அவசியம். "வராகி மாலை" என்னும் நூல் வீரை கவிராச பண்டிதர் என்பவரால் 16-ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்டுள்ளது.  

     வாராஹி மாலை"

1.இருகுழை கோமளம் தாள் புஷ்பராகம் இரண்டுகண்ணும்
குருமணி நீலம் கை கோமேதகம் நகம் கூர்வயிரம்
திருநகை முத்துக் கனிவாய் பவளம் சிறந்தவல்லி
மரகத நாமம் திருமேனியும் பச்சை மாணிக்கமே

இரு குழை கோமளம் – இரண்டு காதுகளிலும் உள்ள குண்டலம் மாணிக்கம்; Ruby எனப்படும் பளபளப்பான சிவப்பு நிற மாணிக்கம்: சூரியன் கிரகத்திற்குரிய நவரத்தினம் இது.

தாள் புஷ்பராகம் – இரண்டு காலும் புஷ்பராக நவரத்தினத்தை போன்ற
பளபளப்பான மஞ்சள் நிறமுடையது. Yellow sapphire எனும் மஞ்சள்நிற புஷ்பராகம்: குரு (வியாழன்) பகவானுக்குரிய ரத்தினம்.

இரண்டு கண்ணும் குருமணி நீலம் – இரண்டு கண்ணும் ஒளியுடைய மணியாகிய நீலம். Blue sapphire எனப்படும் நீலக்கல்: சனி பகவானுக்குரிய ரத்தினம்.

கை கோமேதகம் – கை கருஞ்சிவப்பு கோமேதகமாய் ஒளிரும். Garnet எனப்படும் இருண்ட சிவப்பு நிற கோமேதகம்: இராகு கிரகத்திற்குரிய ரத்தினம்.

நகம் கூர் வைரம் – நகம் வைரத்தை போல் பளபளப்புடனும், எதிரிகளின் உடலை கிழிக்கும் விதத்தையும் சுட்டுகிறது. Diamond எனப்படும் வைரம்: சுக்கிரனிற்குரிய ரத்தினம்.

திருநகை முத்து – நகைக்கும் போது அவள் பற்கள் முத்தை ஒத்தனவாக விளங்குகிறது. Pearl எனப்படும் வெண்ணிற முத்து: சந்திரனிற்குரிய ரத்தினம்.

கனிவாய் பவளம் : வராகத்தின் வாயை உடைய இவளின் வாய் எதிரிகளின் இரத்தத்தை குடிக்கும் குணம் கொண்டதால் பவளத்தை போல் மின்னுகின்றது. Coral எனப்படும் இரத்தச்சிவப்பு நிற பவளம்: செவ்வாய் கிரகத்தின் ரத்தினம்.

சிறந்த வல்லி மரகதம் நாமம் – பச்சை நிறமுடைய சிறந்த மரகத ரத்தினத்தை போல் ஒளிரும் அம்பாள் என்பதால் மரகதவல்லி என்றும் பெயர் பெறுவாள். Emerald எனப்படும் பச்சைநிற மரகதம்: புதன் கிரகத்தின் ரத்தினம்.

திருமேனி பச்சையும் மாணிக்கமே – இவளது முழுத் திருமேனி பச்சையும் மாணிக்க சிவப்பும் கலந்திருக்கும்.

” வாராஹி மாலை ” என்ற இந்நூல் கட்டளை கலித்துறையாக அமைக்கப்பட்டுள்ளது . ஒவ்வொரு அடியும் ஒற்று நீக்கி 16 எழுத்துகள் இருக்குமாறும், நிரையசை கொண்டு தொடங்கினால் ஒற்று நீக்கி 17 எழுத்துகள் இருக்குமாறும் பாடுவர். இதன்படி நான்கடிகள் உடைய ஒரு கலித்துறைச் செய்யுள் நேரசையில் தொடங்கினால் ஒரு செய்யுளில் மொத்தம் 64 எழுத்துகளும், நிரையசையில் தொடங்கினால் அச்செய்யுளில் மொத்தம் 68 எழுத்துகளும் இருக்கும்.

அடுத்த பதிவில் இன்னும் சில பாடல்களை ” வாராஹி மாலை” யிலிருந்து பார்க்கலாம்

சாக்த மார்க்கத்தில் இவள் போல ஒரு காருண்யமும் இல்லை .. பிரளயமும் இல்லை ..

நினைத்து பார்த்த மாத்திரத்தில் கண்முன்னே சட்டென்று காட்சி தருபவள் #அஸ்வாரூடா வாராகி.. இவளோ வெண்குதிரை மீது யௌவனவதியாக பேரழகுடன் காற்றாக பறப்பவள்… மும்மடிப்புடைய இடையுடன் சர்வ நவரத்தினங்கள் ஆபரணங்கள் தரித்து வரும் அநாதரட்சகி .. இவளை நள்ளிரவு ஆராதனை செய்யும் பக்தர்கள் காதில் பன்றி உருமலுடன் தான் நேரில் பிரத்யட்சமாக வந்திருப்பதை தெரிவிப்பாள் ..

மேலும் நமது பீடத்தில் இந்த வருடமும் ஆனி மாதம் அம்மாவாசையில் இருந்து பத்து நாட்கள் அஷடா நவராத்திரி உற்சவம் நடைபெற இருக்கின்றது. 09.07.2021ல் வெள்ளிக்கிழமை அம்மாவசை அன்று தீர்த்தவாரி மற்றும் மாகாப்பு அலங்காரத்துடன் தொடங்கி 19.07.2021 வரை பத்து நாட்கள் தினமும் ஹோமம், அபிஷேகம் ஆலங்காரம் விஷேச பைடயலுடன் சிறப்பு பூஜைகள் நடைபெறும். கடைசி நாள் அன்று திருக்கல்யாண வைபவத்துடன் மக்களுக்கு சிறப்பு கல்யாண சாப்பாட்டுடன் உற்சவம் நிறைவுறும்.

இந்த உற்சவ நிகழ்வுக்கும் கட்டளைதாரர்கள் வரவேற்க படுகின்றனர் இதற்கும் பக்தர்கள் தங்களால் முடிந்தால் முடிந்த உதவிகள் செய்யலாம்.

அழைக்கின்றோம் தூத்துக்குடியம்பதி

ஸ்ரீம்மகேஷ்சுவாமி_ஜீ யின் அன்னை ஆதிபராசக்தி சொர்ண ஆகர்சன மகா கால பைரவர் அஷ்வருட மகா வாராஹி அம்மன் மகா சித்தர் தவ பீடம்

5/122,விஸ்வபுரம். மெயின்ரோடு.
தூத்துக்குடி – 628002.
தொடர்புக்கு ; 9894336164.

இந்த புண்ணிய காரியத்தில் பங்கேற்க தங்களால் முடிந்தால் முடிந்த உதவியை இந்த வங்கி கணக்கில் செலுத்தலாம்.

Maheshkumar
Acc.. 20469779163
Ifsc.. SBIN0017124
MICR.. 627002045
Swiftcode.. SBININBB
STATE BANK OF INDIA
TUTICORIN BRANCH
Google pay.. +91 98943 36164
Phone pay.. +91 98943 36164

ஸ்ரீம் அன்னை ஆதி பைரவர் வராஹி அறக்கட்டளை

நவராத்திரி உற்சவத்தின் நிறைவு நாளில் வாராஹிக்கும் உன்மத்த பைரவருக்கும் திருக்கல்யாணம்

By Biravar in Events on June 10, 2021

கஷ்டமெல்லாம் தீர்க்கும் உன்மத்த மகா காலபைரவர்!

இப்பொழுது உள்ள கொரோனா காலத்தில் இருந்து உலக மக்களைய் காக்கவும் மற்றும் கொரோனா என்ற ஆட்கொல்லி நச்சு கிருமி நம்மை விட்டு நீங்கவும் நமது பீடத்தில் தினமும் பூஜைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

மேலும் அடுத்த மாதம் 09.07.2021 அம்மாவாசை அன்றில் இருந்து 10 நாட்கள் அஷடா நவராத்திரி இந்த நவராத்திரி வாராஹி அம்மனுக்கான நவராத்திரி இந்த உற்சவத்தின் நிறைவு நாளில் வாராஹிக்கும் உன்மத்த பைரவருக்கும் திருக்கல்யாணம் நடைபெறும் இந்த இடைப்பட்ட காலத்திற்க்குள் நாம் உன்மத்த மகா கால பைரவர் ஐம்பொன் சிலையை செய்து நமது பீடத்திற்கு கொண்டு வர வேண்டிய கால கட்டத்தில் உள்ளோம் இதற்காக பக்தர்கள் தங்களால் முடிந்த உதவிகளைய் செய்து பைரவர் நமது பீடத்திற்க்கு வர உதவுங்கள் மேலும் குருவருளும், திருவருளும் பெற்று வாழ்வாங்கு வாழ வேண்டுமென வாழ்த்தி வேண்டிக் கொள்கிறேன்.

கலியுகத்துக்கு காலபைரவர் என்றொரு வாசகம் உண்டு, கேள்விப்பட்டிருக்கிறீர்கள்தானே! இப்போது நடக்கும் கலியுகத்தில், எந்தவொரு மனக்கிலேசம், மனக்குழப்பம் என்றால் காலபைரவரை வழிபட்டால், நம் கவலைகளையெல்லாம் தீர்த்து வைப்பார் .

சிவாலயங்களில், பிராகாரத்தைச் சுற்றி வரும் போது, பைரவருக்கு என்று தனிச்சந்நிதி அமைந்திரு க்கும். தேய்பிறை அஷ்டமி, பைரவருக்கு உகந்த நாள். இந்த நாளில், காலையிலும் மாலையிலும் பைரவருக்கு அபிஷேகங்கள், அலங்காரங்கள், ஆராதனைகள் விமரிசையாக நடைபெறும்.

தேய்பிறை அஷ்டமியில், அவருக்கு உரிய நன்னாளில், பைரவரை வணங்கிட பயமெல்லாம் விலகிடும். இந்த நாளில், பைரவருக்கு செவ்வரளி மலர்கள் சார்த்தி வணங்கி வழிபடுவது, மிகுந்த பலன்களை வாரி வழங்கும் என்பது ஐதீகம்!

மேலும் பைரவருக்கு மிளகு கலந்த சாதம் நைவேத்தியமாகப் படைத்து வழிபடுவது, எதிரிகளைத் தகர்க்கும்; எதிர்ப்புகளை விலக்கும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

அதேபோல், இந்த நாளில் பைரவருக்கு வடைமாலை சார்த்தியும் வேண்டிக் கொள்கிறார்கள் பக்தர்கள். தேய்பிறை அஷ்டமி நாளில், செவ்வரளி மாலை சார்த்தி, மிளகு அல்லது தயிர் சாதம், தேனில் ஊறவைத்த பேரீச்சம் பழம், தேனில் ஊறவைத்த உளுந்த வடை நைவேத்தியம் செய்து வேண்டிக் கொண்டால், வீட்டில் உள்ள தரித்திர நிலை விலகும். கடன் தொல்லையில் இருந்து காலபைரவர், மீளச்செய்வார். மேலும் நம் கவலைகள் அனைத்தும் பறந்தோடும் என்கின்றனர் மகான்கள்.

அஷ்டமியன்று அருகில் உள்ள சிவாலயங்களுக்குச் சென்று, பிராகாரத்தில் உள்ள பைரவரைத் தரிசியுங்கள். செவ்வரளி மாலை சார்த்துங்கள். மிளகு அல்லது தயிர்சாதம் நைவேத்தியமாக வழங்குங்கள். வெண்பொங்கல் நைவேத்தியமும் சிறப்பைத் தரும். முடிந்தால், தயிர்சாதப் பொட்டலம் தானமாக வழங்குங்கள். கடன் பிரச்சினை தீரும். கவலைகள் பறந்தோடும். தோஷங்கள் யாவும் விலகும் என்பது உறுதி!

இது சிறு குறிப்பு மட்டுமே.

அழைக்கின்றோம் தூத்துக்குடியம்பதி

ஸ்ரீம்மகேஷ்சுவாமி_ஜீ யின் அன்னை ஆதிபராசக்தி சொர்ண ஆகர்சன மகா கால பைரவர் அஷ்வருட மகா வாராஹி அம்மன் மகா சித்தர் தவ பீடம்

5/122,விஸ்வபுரம். மெயின்ரோடு.
தூத்துக்குடி – 628002.
தொடர்புக்கு ; 9894336164.

மேலு‌ம் நமது தூத்துக்குடி விஸ்வபுரம் #ஸ்ரீம்மகேஷ்சுவாமி_ஜீ மகா சித்தர் தவ பீடத்தில் மகா கால பைரவர், சொர்ணாகர்ஷன பைரவர் என்று இரு பெரும் பைரவர்கள் அரசாட்சி செய்கிறார்கள் இந்த இரு பெரும் பைரவ திருமேனிகளுக்கும் புதிதாக ஐம்பொன்னால் ஆன உற்சவ மூர்த்திகள் செய்ய வேண்டி உள்ளது
அதற்காக பக்தர்கள் தங்களால் முடிந்தால் முடிந்த உதவிகள் செய்து இந்த பைரவ திருமேனிகள் செய்ய உதவலாம் இதன் மூலமாகவும் உங்கள் தோஷங்கள் அனைத்தும் நிவர்த்தியாகும் இந்த பைரவர்கள் அருளால் உங்களுக்கும் உங்களுக்கு பின்னால் வரும் தலைமுறையினர்க்கும் இந்த பைரவர் இருக்கும் காலம் வரை புண்ணியம் கிடைக்கும்.

மேலும் இந்த பைரவர் திருமேனிகளுக்கு உதவி செய்வதன் மூலம் தங்கள் குடும்பத்தில் உள்ள அனைத்து விதமான பிரச்சனகளும் குடும்பஒற்றுமை, கல்வி, வேலைவாய்ப்பு, கல்யாணம், குழந்தையின்மை, மாந்திரிக சூழ்ச்சியால் பாதிக்கப்பட்டவர்கள், கண்திருஷ்டியால்பாதிக்கபட்டவர்கள்.பூா்வ ஜென்ம கர்மாவால் பாதிக்கப்பட்டவர்கள் பிதூர்தோசம், பிதூர்சாபம்உள்ளவர்கள், காலசர்ப்ப தோசம்,நவக்கிரக தோஷம், பிரம்மஹத்தி தோஷம் போன்ற அனை‌த்து விதமான எல்லா தோஷங்களும் நிவர்த்தி ஆகும். நமக்கு தான் குறிப்பிட்ட வயதில் மரணம் உண்டு இந்த உற்சவ திருமேனிகள் 1000 வருடங்கள் கடந்தாலும் அப்படியே தான் இருக்கும் இந்த திருமேனிகளுக்கு உதவுவதன் மூலம் இந்த திருமேனிகள் இருக்கும் காலம் வரை நமக்கும் நமக்குப்பின் வரும் நம் சந்ததியினருக்கும் எந்த பாதிப்பும் வராமல் இந்த தெய்வத்தின் அருள் நம்மை பரிபூரணமாக காத்து நிற்க்கும் மிகப்பெரிய புண்ணியம் கிடைக்கும்.

நமது பீடத்திற்காக இப்பொழுது உன்மத்த மகா கால பைரவர்,& சொர்ண ஆகர்சன பைரவர் செய்ய முடிவு செய்து உன்மத்த மகா கால பைரவர் தனது திருமேனியில் 12ராசிகளைய் குறிக்கும் வகையில் 12 நாகங்களைய் ஆபரணமாகவும் திருவாட்சியில் ஒவ்வொரு பக்கமும் 9 கிரகங்களைய் தாங்கி நிற்பது போல 9 நாக சர்ப்ப அமைப்புகள் காலசர்ப்ப தோஷத்தில் ராகு கேது பிடிக்குள் அனைத்து கிரகங்கள் இருப்பது போல் நமது பீட பைரவர் நாகங்களுக்கு மத்தியில் காலசர்ப்பதோஷ நிவாரணியாகவும் மேலும் குதிரை, நாய் வாகனத்துடனும் பித்ரு, சர்ப்ப தோஷத்துக்கு நிவாரணியாக அமைய உள்ளார். அனைத்து நட்சத்திர ராசியினரும் வழிபட்டு பயனடையும் வகையில் அமைய உள்ளது.

ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் செல்வத்திற்க்கு அதிபதியாகவும் வாழ்வில் வெற்றிக்காக போராடி கொண்டிருப்பவர்கள் மேலும் தனது துறையில் 99/- விழுக்காடு வந்து தோல்வி அடைபவர்கள் இந்த பைரவரை சரணடைந்தால் வெற்றி பெரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது மேலும் அவரது திருவாட்சியில் அனைத்து தடைகளையும் எரிக்கும் விதமாக தீச் சூவாலய் அமைப்புடன் அமைய உள்ளது .இவரைய் சரணடைய எங்கும் எதிலும் வெற்றி தான்.

இந்த இரு பெரும் பைரவர் ஐம்பொன் சிலை செய்வதற்க்கு மோல்டிங்டைய் எல்லாம் ரெடியாகி விட்டது மெட்டல் வாங்க பணம் இல்லாத காரணத்தால் வேலைகள் தடைப்பட்டுள்ளது

இந்த அருமையான புண்ணிய காரியத்தில் தங்களால் முடிந்தால் முடிந்த உதவிகளை செய்து பைரவர் ஐம்பொன் சிலை செய்ய உதவுவதன் மூலம் நமக்கும் நமக்கு பின் வரும் தலைமுறையினருக்கும் புண்ணியத்தைய் சேர்த்து வாழ்வாங்கு வாழ செய்யுங்கள் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

இந்த புண்ணிய காரியத்தில் பங்கேற்க தங்களால் முடிந்தால் முடிந்த உதவியை இந்த வங்கி கணக்கில் செலுத்தலாம்.

Maheshkumar
Acc.. 20469779163
Ifsc.. SBIN0017124
MICR.. 627002045
Swiftcode.. SBININBB
STATE BANK OF INDIA
TUTICORIN BRANCH
Google pay.. +91 98943 36164
Phone pay.. +91 98943 36164

ஓம் ஸ்ரீசொர்ணபைரவா போற்றி
ஸ்ரீ காலபைரவர் திருவடிகளே போற்றி.

ஸ்ரீம் அன்னை ஆதி பைரவர் வராஹி அறக்கட்டளை

மகா சித்தர் தவ பீடத்தை வலைத்தளம் மூலமாக தொடர்புகொள்ளல்ம் .

ஸ்ரீம்மகேஷ்சுவாமி_ஜீ

ஓம்சிவசிவஓம்

திருச்சிற்றம்பலம்.

பைரவரை வணங்கினாலே எல்லாவித நன்மைகள் கிடைக்கும் என்றால் நமது பீடத்திற்காக இரு பெரும் பைரவ திருமேனிகளுக்கு ஐம்பொன்னால் ஆன உற்சவ மூர்த்தி செய்கிறோம் அதற்க்கு உதவினால்
உங்க வாழ்க்கையில் சனிஸ்வர கிரகத்தினால் எந்த விதமான பாதிப்பும் எப்பொழுதும் வரவே வராது மேலும் உஙகள் வாழ்வில் உள்ள அனைத்துவிதமான தோஷங்கள், பாவங்கள் எல்லாம் நீங்கி சந்தோசமான இனிமையான வாழ்க்கை கிடைக்கும்.

பிறகென்ன… வெற்றி வெற்றி எங்கும் வெற்றி எதிலும் வெற்றிதான்.

வைகாசி மாத தேய்பிறை அஷ்டமி பூஜை

By Biravar in Events on June 3, 2021

இன்று நமது தூத்துக்குடி விஸ்வபுரம் #ஸ்ரீம்மகேஷ்சுவாமி_ஜீ மகா சித்தர் தவ பீடத்தில் இந்த வருட வைகாசி மாத தேய்பிறை அஷ்டமி பூஜை இன்று 02.06.2021 புதன் கிழமையன்று நண்பகல் 11:30 மணிக்கு மேல் நமது பீட மகா கால பைரவருக்கு விஷேச அபிஷேகங்கள், அலங்காரம் தீபாரதனை பூஜைகள் மிக சிறப்பாக நடைபெற்ற காட்சிகள்.

உலக மக்கள் அனைவரும் கொரோனா என்ற ஆட்கொல்லி நச்சு கிருமியிடம் இருந்து விடுபட்டு நிம்மதியான வாழ்கை வாழ வேண்டுமென நமது பீட மகா கால பைரவரிடமும் வேண்டி இன்று தேய்பிறை புதாஷ்டமி பூஜை மிக சிறப்பாக நடைபெற்றது.

இது கொரோனா காலம் என்பதால் பக்தரகள் அனுமதி இல்லை என்பதால் மிகவும் சிரமமான சூழலுக்கேற்ப இந்த பூஜைகள் நடைபெறுகின்றன

இந்த சூழலுக்கேற்ப பக்தர்கள் தங்களுடைய வீடுகளில் இருந்தே பைரவரையும் அவருடைய பூஜைகளையும் பார்க்க வேண்டுமென இந்த சூழலிலும் இடைவிடாது பூஜைகள் நடைபெற்று கொண்டிருக்கிறது.

ஓம் ஸ்ரீசொர்ணபைரவா போற்றி

ஸ்ரீ காலபைரவர் திருவடிகளே போற்றி.

ஸ்ரீம் அன்னை ஆதி பைரவர் வராஹி அறக்கட்டளை

வைகாசி மாத தேய்பிறை பஞ்சமி பூஜை

By Biravar in Events on June 1, 2021

நமது தூத்துக்குடி விஸ்வபுரம் #ஸ்ரீம்மகேஷ்சுவாமி_ஜீ மகா சித்தர் தவ பீடத்தில் இந்த வருட வைகாசி மாத தேய்பிறை பஞ்சமி பூஜை இன்று 30.05.2021 ஞாயிற்றுக் கிழமையன்று நண்பகல் 01:00 மணிக்கு மேல் நமது தாய் அன்னை அஷ்வாரூட மகா வாராஹி அம்மனுக்கு விஷேச அபிஷேக அலங்காரம் மற்றும் தீபாரதனை பூஜைகள் மிக சிறப்பாக நடைபெற்ற காட்சிகள்.

உலக மக்கள் அனைவரும் கொரோனா என்ற ஆட்கொல்லி நச்சு கிருமியிடம் இருந்து விடுபட்டு நிம்மதியான வாழ்கை வாழ வேண்டுமென நம் தாய் அன்னை அஷ்வாரூட மகா வாராஹி அம்மனிடம் வேண்டி இன்று தேய்பிறை பஞ்சமி பூஜை மிக சிறப்பாக நடைபெற்றது.

இது கொரோனா காலம் என்பதால் பக்தரகள் அனுமதி இல்லை என்பதால் மிகவும் சிரமமான சூழலுக்கேற்ப இந்த பூஜைகள் நடைபெறுகின்றன

ஓம் ஸ்ரீம் அஷ்வாரூட மஹா வாராஹி அம்மனே போற்றி போற்றி !!!

ஓம் ஸ்ரீசொர்ணபைரவா போற்றி !

ஸ்ரீ காலபைரவர் திருவடிகளே போற்றி.!

ஸ்ரீம் அன்னை ஆதி பைரவர் வராஹி அறக்கட்டளை

வாழ்க_வளமுடன்

ஸ்ரீம்மகேஷ்சுவாமி_ஜீ

ஓம்சிவசிவஓம்

திருச்சிற்றம்பலம்.

பௌர்ணமி பூஜை

By Biravar in Events on May 29, 2021

நமது தூத்துக்குடி விஸ்வபுரம் #ஸ்ரீம்மகேஷ்சுவாமி_ஜீ மகா சித்தர் தவ பீடத்தில் இந்த வருட வைகாசி அனுச நட்சத்திரமும் பொளர்ணமியும் இணைந்த பௌர்ணமி பூஜை இன்று 26.05.2021 புதன் கிழமையன்று மாலை 06:00 மணிக்கு நமது தாய் அன்னை ஆதிபராசக்தி, சொர்ணாகர்ஷன பைரவருக்கு விஷேச அபிஷேக அலங்காரம் மற்றும் பூஜை தீபாராதனைகள் மிக சிறப்பாக நடைபெற்ற காட்சிகள்.

உலக மக்கள் அனைவரும் கொரோனா என்ற ஆட்கொல்லி நச்சு கிருமியிடம் இருந்து விடுபட்டு நிம்மதியான வாழ்கை வாழ வேண்டுமென நம் அன்னை ஆதிபராசக்தியிடமும், சொர்ண ஆகர்சன பைரவரிடமும் வேண்டி இன்று பௌர்ணமி பூஜை மிக சிறப்பாக நடைபெற்றது.

இது கொரோனா காலம் என்பதால் பக்தரகள் அனுமதி இல்லை என்பதால் மிகவும் சிரமமான சூழலுக்கேற்ப இந்த பூஜைகள் நடைபெறுகின்றன

ஓம் ஸ்ரீசொர்ணபைரவா போற்றி

ஸ்ரீ காலபைரவர் திருவடிகளே போற்றி.

ஸ்ரீம் அன்னை ஆதி பைரவர் வராஹி அறக்கட்டளை

வாழ்க_வளமுடன்

ஸ்ரீம்மகேஷ்சுவாமி_ஜீ

ஓம்சிவசிவஓம்

திருச்சிற்றம்பலம்.

விசாக நட்சத்திர பூஜை

By Biravar in Events on May 26, 2021

நமது தூத்துக்குடி விஸ்வபுரம் #ஸ்ரீம்மகேஷ்சுவாமி_ஜீ மகா சித்தர் தவ பீடத்தில் இந்த வருட வைகாசி விசாக பூஜை 25.05.2021 செவ்வாய் கிழமையன்று காலை 11:00 மணிக்கு மேல் மிக சிறப்பாக நடைபெற்றது.

நமது பீடத்தில் முருகனுக்கு பிறந்த நாளான இன்று 25.05.2021 செவ்வாய்கிழமை வைகாசி விசாக நட்சத்திர பூஜை பக்தர்களின் ஒத்துழைப்போடு மிக சிறப்பாக நடைபெற்றது.

உலக மக்கள் கொரோனா என்ற ஆட்கொல்லி நச்சு கிருமியிடம் இருந்து விடுபடும் பொருட்டு நமது பீட முருகனுக்கு விஷேச பூஜைகள் நடைபெற்றன

அந்த பூஜையில் நடைபெற்ற நமது பீட முருகன் பழநி தண்டாயுதபாணியின் அபிஷேகம், அலங்காரம், மற்றும் விசேஷ அன்னப் படைப்பு பூஜைகள் உங்களுக்காக

வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா

அஷ்வாரூட மகா வராஹி வளர்பிறை பஞ்சமி பூஜை

By Biravar in Events on May 14, 2021

SrimMahesh Samyji #om_siva_siva_om

நமது தூத்துக்குடி விஸ்வபுரம் #ஸ்ரீம்மகேஷ்சுவாமி_ஜீயின் அன்னை ஆதிபராசக்தி சொர்ணாகர்ஷன மகா கால பைரவர் அஷ்வாரூட மகா வராஹி அம்மன் மகா சித்தர் தவ பீடத்தில்
16 – 05 – 2021 ஞாயிற்றுக்கிழமை பஞ்சமி திதி புனர்பூச நட்சத்திரத்தில் அன்று நண்பகல் 01 – 00 மணிக்கு மேல் அஷ்வாரூட மகா வராஹி அம்மனுக்கு வளர்பிறை பஞ்சமி பூஜை மிக சிறப்பாக நடைபெறவுள்ளது.

https://www.youtube.com/watch?v=nnisak9YmXQ

உலகில் கொரோனா 2ம் அலை வேகமாக பரவி வருகின்றது இதில் இருந்து உலக மக்களைய் காக்கும் பொருட்டும் உலக மக்கள் அனைவரும் கொரோனா என்ற ஆட்கொல்லி நச்சு கிருமியிடம் இருந்து விடுபட்டு உலக மக்கள் நிம்மதியாகவும், சந்தோஷமாகவும் வாழும் பொருட்டு நம் தாய் வாராஹி அம்மனுக்கு அன்று விசேஷ பூஜைகள் நடைபெற இருக்கின்றது.

இது கொரோனா காலம் இந்த பூஜை மிக சிறப்பாக நடைபெற பக்தர்கள் தங்களால் முடிந்தால் முடிந்த உதவிகளைய் செய்து அஷ்வாரூட மகா வராஹி அம்மன் அருளைய் பெற்று பெரு வாழ்வு வாழ வேண்டுமென வாழ்த்தி வேண்டிக் கொள்கிறேன்.

நம் வாழ்வில் அனைத்துக்கும் ஆதியே வாராகி தான்..

அஷ்டவாராகி_வழிபாடு

ஶ்ரீ வாராஹி தேவியின் உபாசனை என்றால் ஏதோ மின் அணு உலையில் பார்க்கும் பணியை போல மக்கள் அஞ்சுவர். அத்தகைய உக்ரமும் கருணையும் உருவான தேவ உடலும் மிருக பலமும் கொண்ட ஶ்ரீ வாராஹி அமைதியுடனும் பயபக்தியுடனும் தூய்மையாக வழிபடும் பக்தர்கள் மனத்தில் “அஹமித்யேவ பவாநீம் ” என்பதற்கு ஏற்ப வஜ்ர வாராகியாக மனத்தின் உள்ளே அரூபமாக உறையும் பெருந்தேவதை..

மனிதகுலத்தின் இன்னல்களுக்கு காரணமாக விளங்குகிற மூன்று கிரகங்கள் ராகு கேது சனி ஆவர்.. மகிஷம் கருமையான சனியின் அம்சம்.. எதுவெல்லாம் பூமியை கீருமோ , பிளக்குமோ அதுவெல்லாம் கேதுவின் அம்சம்… கலப்பை மண்ணை பிளக்கும் கேது ஆவான் ..

பொருட்களை இடித்து தூளாக்கும் அனைத்தும் ராகுவின் அம்சம்.. உலக்கையே ராகு ஆவான்..

ராகுவையும் , கேதுவையும் ஆட்டிவைத்து சனியை வாகனமாக்கி அதிலேறி வரதமும் அபயமும் தந்து பக்தர்களின் துயரத்தை தீர்ப்பவளே இந்த வாராகி எனும் தெய்வம் ..

வஜ்ர தந்த பற்களால் பகைஞர்தம் உடலை பிளந்து குருதி குடித்து ரத்த திலகமிட்டு குடல்மாலை பூண்டு மது மாமிசம் புசிக்கும் அகோரி திகம்பரி சிம்மாரூடாவும் இவளே..

இவளது உக்ர பிரளய வடிவத்தையோ , இவளுடைய மாமிச நைவேத்ய பொருட்களையோ நிந்தனை செய்தவர் , இவளை பற்றிய பேச்சுகளை எதிர்த்து நின்று சரியாக வாதாடும் பாவிகள் அனைவரும் சூலத்திற்கு இரையாவதில் ஐயமில்லை ..

எனவே வாராஹியிடம் இக்குணம் படைத்தோர் சற்று ஒதுங்கி இருங்கள் ..

சாக்த மார்க்கத்தில் இவள் போல ஒரு காருண்யமும் இல்லை .. பிரளயமும் இல்லை ..

நினைத்து பார்த்த மாத்திரத்தில் கண்முன்னே சட்டென்று காட்சி தருபவள் #அஸ்வாரூடா வாராகி.. இவளோ வெண்குதிரை மீது யௌவனவதியாக பேரழகுடன் காற்றாக பறப்பவள்… மும்மடிப்புடைய இடையுடன் சர்வ நவரத்தினங்கள் ஆபரணங்கள் தரித்து வரும் அநாதரட்சகி .. இவளை நள்ளிரவு ஆராதனை செய்யும் பக்தர்கள் காதில் பன்றி உருமலுடன் தான் நேரில் பிரத்யட்சமாக வந்திருப்பதை தெரிவிப்பாள் ..

மேலும் நமது பீடத்தில் இந்த வருடமும் ஆனி மாதம் அம்மாவாசையில் இருந்து பத்து நாட்கள் அஷடா நவராத்திரி உற்சவம் நடைபெற இருக்கின்றது. 09.07.2021ல் வெள்ளிக்கிழமை அம்மாவசை அன்று தீர்த்தவாரி மற்றும் மாகாப்பு அலங்காரத்துடன் தொடங்கி 19.07.2021 வரை பத்து நாட்கள் தினமும் ஹோமம், அபிஷேகம் ஆலங்காரம் விஷேச பைடயலுடன் சிறப்பு பூஜைகள் நடைபெறும். கடைசி நாள் அன்று திருக்கல்யாண வைபவத்துடன் மக்களுக்கு சிறப்பு கல்யாண சாப்பாட்டுடன் உற்சவம் நிறைவுறும்.

இந்த உற்சவ நிகழ்வுக்கும் கட்டளைதாரர்கள் வரவேற்க படுகின்றனர் இதற்கும் பக்தர்கள் தங்களால் முடிந்தால் முடிந்த உதவிகள் செய்யலாம்.

அழைக்கின்றோம் தூத்துக்குடியம்பதி

ஸ்ரீம்மகேஷ்சுவாமி_ஜீ யின் அன்னை ஆதிபராசக்தி சொர்ண ஆகர்சன மகா கால பைரவர் அஷ்வருட மகா வாராஹி அம்மன் மகா சித்தர் தவ பீடம்

5/122,விஸ்வபுரம். மெயின்ரோடு.
தூத்துக்குடி – 628002.
தொடர்புக்கு ; 9894336164.

இந்த புண்ணிய காரியத்தில் பங்கேற்க தங்களால் முடிந்தால் முடிந்த உதவியை இந்த வங்கி கணக்கில் செலுத்தலாம்.

Maheshkumar
Acc.. 20469779163
Ifsc.. SBIN0017124
MICR.. 627002045
Swiftcode.. SBININBB
STATE BANK OF INDIA
TUTICORIN BRANCH
Google pay.. +91 98943 36164
Phone pay.. +91 98943 36164

ஸ்ரீம் அன்னை ஆதி பைரவர் வராஹி அறக்கட்டளை

மகா சித்தர் தவ பீடத்தை வலைத்தளம் மூலமாக தொடர்புகொள்ளலாம் .

ஸ்ரீம்மகேஷ்சுவாமி_ஜீ

ஓம்சிவசிவஓம்

திருச்சிற்றம்பலம்.

சித்திரை மாத தேய்பிறை அஷ்டமி

By Biravar in Events on May 8, 2021

சித்திரை மாத தேய்பிறை அஷ்டமி பைரவரை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்

ஆகமங்கள், சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ள அஷ்ட பைரவர் விளக்கங்களை கூர்ந்து நோக்கினால் தெள்ளத் தெளிவாக விளங்கும்.

அஷ்ட பைரவர்களும் அறுபத்தி நான்கு காலங்களில், அறுபத்தி நான்கு தோற்றங்கள் கொண்ட பைரவராகக் காட்சி தருகிறார்கள்.

12 ராசிகளையும் தன் உடலில் அங்கங்களாகக் கொண்டவர் ஸ்ரீபைரவர்.

நவக்கிரகங்களுக்கும் பிராண தேவதையாக இருப்பவரும் பைரவரே.

தேவ, அசுர, மானிடர்களும் அஞ்சும் கிரகம் சனி பகவான் ஆவார். சனிக்கு வரம் தந்து, இக்கடமையைச் செய்ய வைத்த சனியின் குரு ஸ்ரீபைரவரே ஆவார்.

சனியின் வாத நோயை நீக்கியவரும் பைரவரே.

தன் தமையன் எமன், பைரவரிடம் அதீத சக்திக்கு வரம் பெற்றதைக் கண்ட அவன் தம்பி சனீஸ்வரன், பைரவரை நோக்கி கடுமையான தவம் இருந்தான்.

தவ வலிமையால் பைரவர் அவன் முன் தோன்றி, மும்மூர்த்திகள் உள்பட அனைவரையும், கால வர்த்தமான நிர்ணயப்படி (ஜோதிட ரீதியாக சனிப்பெயர்ச்சிப்படி) நல்லது தீயது செய்யும் சக்தி அருளினார்.

அப்போது சனீஸ்வரனிடம் ஒரு சத்தியபிராமாணம் பெற்றுக் கொண்டார்.

சனீஸ்வரனின் சஞ்சாரத்தால் எவர் ஒருவருக்கு கஷ்டம் கொடுக்க வேண்டியிருந்தாலும், அவர்கள் பைரவரை வழிபட்டு சரணடைந்தால் அவர்களுக்கு சனீஸ்வரன் நன்மையையே செய்ய வேண்டும் என பைரவபெருமானிடம் விரும்பினார்.

அதனால்தான், ஏழரை நாட்டுச்சனி, அஷ்டமச்சனி, ஜன்மச்சனியால் அவதிப்படுவோர் பைரவ வழிபாடு ஒன்றினால் மட்டுமே அத்தொல்லைகளிலிருந்து விடுபட முடியும்.