Blog Subtitle Blog Title

சந்திரபகவானை இப்படி தரிசனம் செய்தால் வேண்டுதல் நிறைவேறும்.

By Biravar in News on June 12, 2021

12_06_21சனிகிழமைதவறவிடாதீர்கள்நாளைஇரவுசந்திர_பகவானை,
#இப்படிதரிசனம்செய்தால்வேண்டியவேண்டுதல்உடனேநிறைவேறும்.
🌜🌜🌜🌜🌜🌜🌜🌜🌜
பொதுவாகவே மூன்றாம் பிறை அன்று, சந்திர தரிசனம் செய்தால் மன நிம்மதி கிடைக்கும். குழப்பமான நிலையில் இருக்கும் பிரச்சனைகளுக்கு கூட, சுலபமாக தீர்வு கிடைக்கும் என்று சொல்கிறது நம்முடைய சாஸ்திரம். இப்படி இருக்க 12-06-2021 இன்று இரவு 7.19 மணியிலிருந்து 8.12 மணிக்குள் சந்திர பகவானை தரிசனம் செய்தால் நம் மனதில் நினைத்த காரியம் உடனடியாக நிறைவேறும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. இந்த தினத்தில் சந்திர பகவானை எப்படி முறையாக வழிபட வேண்டும் என்பதைப் பற்றியும், குறிப்பாக எந்த நட்சத்திரக்காரர்கள் இந்த தரிசனத்தை செய்தால் முக்தி பெறும் அளவிற்கு பலன் கிடைக்கும் என்பதைப் பற்றியும் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
🌜
இன்றைய தினம் உங்களால் முடிந்தால் கஷ்டப்படும் ஒருவருக்கு, தானம் செய்யலாம். இன்றைய தினத்தில் செய்யப்படும் தானமானது நூறு மடங்கு பலனைத்தரும் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று மாலை 7.19 மணியிலிருந்து 8.12 மணிக்குள் உங்கள் வீட்டு மொட்டை மாடிக்கோ அல்லது பால்கனிக்கோ அல்லது வீட்டு வாசலிலோ, எந்த இடத்தில் உங்களுக்கு சந்திரதரிசனம் கிடைக்குமோ அந்த இடத்தில் வழிபாடு செய்வது மிகவும் சிறப்பு வாய்ந்தது.
🌜
வெறும் கையோடு சந்திர பகவானை தரிசனம் செய்யக்கூடாது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் வீட்டில் இருக்கும் பச்சரிசியை சிறிதளவு எடுத்துக்கொண்டு, ஒரு தாம்பாளத் தட்டில் அந்த பச்சரிசியை பரப்பி, அதன் மேல் ஒரு மண் அகல் தீபத்தை ஏற்றி வைத்து, உங்களது இரண்டு கைகளையும் ஏந்தி, அதாவது இரண்டு கைகளையும் சாமி கும்பிடுவது போல மூடிக் கொள்ளக்கூடாது.
🌜
உங்களது கை இரண்டையும் விரித்து அந்த இறைவனிடம் வேண்டுதல் வைக்க வேண்டும். அதாவது யாசகம் கேட்பது போல் சந்திர பகவானிடம், இன்று நீங்கள் உங்களது வேண்டுதலை வைத்தால், அதற்கான பலனை கூடிய விரைவில் பெற்றுவிடலாம். நல்ல மனதோடு, நீங்கள் வைக்கும் எந்த ஒரு நல்ல வேண்டுதலாக இருந்தாலும், அது படிப்படியாக வெற்றியை நோக்கி செல்லும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.
🌜
குறிப்பாக ரோகிணி, அஸ்தம் திருவோணம் இந்த மூன்று நட்சத்திரகாரர்கள் தொடர்ந்து ஆயிரம் முறை சந்திர பகவானை, மூன்றாம் பிறை அன்று தரிசனம் செய்து வைத்தால் அவர்களுக்கு வாழ்க்கையில் முக்தி கிடைத்து விடும் என்று சொல்லப்பட்டுள்ளது. இன்றைய தினம் இந்த சந்திர பகவானை நீங்கள் தரிசனம் செய்துவிட்டால் போதும். அந்த ஆயிரம் முறை தரிசனம் செய்த பலனை பெற்றுவிடலாம் என்றும் சொல்லப்பட்டுள்ளது. அனைவரும் இந்த சந்திர தரிசனத்தை தவறவிடாமல், வழிபாடு செய்து பலன் பெற வேண்டும்.

மைத்ர முகூர்த்த நேரத்தில் பணத்தைத் திருப்பிக் கொடுங்க மள மள வென கடன் பிரச்சினை தீரும்

மைத்ர முகூர்த்தம் ஒரு தமிழ் மாதத்தில் அதிக பட்சமாக மூன்று நாட்களுக்கு வரும். அந்த மூன்று நாட்களில் ஒவ்வொரு நாளும் அதிகபட்ச மாக இரண்டு மணி நேரம் வரும். இந்த நேரத்தைப் பயன்படுத்தி நமது கடன் எத்தனை கோடி ரூபாய்களாக இருந்தாலும் அதை முழுமையாக அடைத்துவிட முடியும்.

கடன் அடைக்கும் காலம்

செவ்வாய்க்கிழமையும் அசுவினி நட்சத்திரமும் சேருகின்ற நாளில் மேஷ லக்கினம் அமைந்துள்ள நேரம் மைத்ர முகூர்த்தம் ஆகும். இதே போல செவ்வாய்க்கிழமையும், அனுஷ நட்சத்திரமும் சேருகின்ற நாளில் விருச்சிக லக்கினம் அமைந்துள்ள நேரம் மைத்ர முகூர்த்தமாகின்றது. வரும் 22ஆம் தேதி செவ்வாய்கிழமை அனுஷ நட்சத்திரம் இணைந்து விருச்சிக லக்கினம் வரும் நேரம் கடன் அடைக்க ஏற்ற நாளாகும். செவ்வாய்க்கிழமை மாலை 03:52 மணி முதல் 05:58 வரை கடன் அடைக்கலாம்.
நீங்கள் பெருந்தொகையாகத் தரவேண்டிய கடன் தொகையில், கொஞ்சமேனும் குறிப்பிட்ட இந்த நாளில், இந்த நேரத்தில் சம்பந்தப்பட்டவருக்கு திருப்பிக் கொடுங்கள். எவ்வளவு பெரும் தொகை யானாலும், சிறுக சிறுக அடைபட்டுவிடும் என்பது உறுதி.

ஆனி மாதத்தில் ஜூன் 22 தவிர 04.07.2021 ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 01:01 மணி முதல் 02:28 வரை கடன் அடைக்கலாம்.
அதே போல ஆடி மாதத்தில் 20.07.2021 செவ்வாய்க்கிழமை மதியம் 01:05 மணி முதல் மாலை 04:11 வரை கடன் அடைக்கலாம். 30.07.2021 வெள்ளிக்கிழமை இரவு 10:50 மணி முதல் இரவு 01:00 வரையிலும் கடன் அடைக்க நல்ல நாள்.

ஸ்ரீம் அன்னை ஆதி பைரவர் வராஹி அறக்கட்டளை

2 comments Read The Discussion

R.Manickam
R.Manickam reply

மிகவும் நல்ல நிலையில் இந்த காலகட்டத்தில் இருந்திருக்க வேண்டிய நான் பொறாமைக்காரர்களின் சூழ்ச்சிகள் காரணமாக மிகவும் நலிந்த நிலையில் உள்ளேன். நான் என்னுடைய பிரச்சினைகளிலிருந்து வெளிவந்து மீண்டும் நல்ல வாழ்க்கையை வாழ வழி காட்டுங்கள் ஐயா.

Biravar
Biravar reply

ஸ்ரீம் மகேஷ்சுவாமி ஜீ யின் அன்னை ஆதிபராசக்தி சொர்ண ஆகர்சன மகா கால பைரவர் அஷ்வருட மகா வாராஹி அம்மன் மகா சித்தர் தவ பீடத்தை இந்த எண்ணில் தொடர்பு கொள்ளவும் 9894336164.

Leave a Reply to Biravar Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

16 + thirteen =